Home /News /chennai /

டாஸ்மாக் போல் வருமானம் கிடைத்தால் வனத்துறை மீது அக்கறை காட்டுவீர்களா? அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

டாஸ்மாக் போல் வருமானம் கிடைத்தால் வனத்துறை மீது அக்கறை காட்டுவீர்களா? அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்

சத்தியமங்கலம், முதுமலை சரணாலயங்களில் 1,500 ஹெக்டேர் பரப்புக்கு அன்னிய மரங்கள் பரவியுள்ளன என வனத்துறை தெரிவித்துள்ளது.

டாஸ்மாக் நிறுவனம் போல் வருமானம் கிடைத்தால் வனத்துறை மீது அக்கறை காட்டுவீர்களா? என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.

அன்னிய மரங்களை அகற்ற உத்தரவிடக்கோரிய வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வனத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், சத்தியமங்கலம், முதுமலை சரணாலயங்களில் 1,500 ஹெக்டேர் பரப்புக்கு அன்னிய மரங்கள் பரவியுள்ளன. இந்த மரங்களை போர்கால அடிப்படையில் அகற்றாவிட்டால் நாட்டு மரங்கள் பாதிக்கும். அதனால், இந்த மரங்களை அகற்ற தீவிர ஆலோசனை நடந்து வருகிறது.

மேலும், ரசாயன முறைப்படி கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அன்னிய மரங்களை அகற்ற ரூ.536 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனைமலை, சத்தியமங்கலம், முதுமலை, தர்மபுரி, திண்டுக்கல் மண்டலங்களில் அன்னிய மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. அதேபோல், 100 நாள் வேலை உறுதித் திட்ட நிதியை பயன்படுத்துவது குறித்து ஆலோசனை நடந்து வருவதாகவும் வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனைகேட்ட நீதிபதிகள், அன்னிய மரங்களால் உள்நாட்டு மரங்கள் பலியாவதை ஒத்துக் கொள்ளும் அரசு, அறிக்கை தாக்கல் செய்வதை தவிர வேறு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என அரசுக்கு நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். மேலும், அரசின் திட்டங்கள் காகிதங்களில் தான் உள்ளது எனவும், செயலில் எதுவுமில்லை எனவும் அதிருப்தி தெரிவித்தனர்.

அன்னிய மரங்களால் வனத்துக்கும், வன விலங்குகளுக்கும் அச்சுறுத்தல் உள்ளது. அதனால், எதிர்காலத்தில் சரணாலயங்கள் அழிந்து விடும் என நீதிபதிகள் எச்சரித்தனர். இந்த வழக்கு விசாரணை ஜூலை 25ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
Published by:Esakki Raja
First published:

Tags: HighCourt

அடுத்த செய்தி