முகப்பு /செய்தி /சென்னை / வியாசர்பாடியில் சாலையில் தேங்கிய மழை நீரில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு...

வியாசர்பாடியில் சாலையில் தேங்கிய மழை நீரில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு...

வியாசர்பாடியில் சாலையில் தேங்கிய மழை நீரில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு...

Chennai | சென்னை வியாசர்பாடியில் சாலையில் தேங்கிய மழை நீரில் மின்சாரம் பாய்ந்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சென்னை வியாசர்பாடி சஞ்சய் நகர் 2வது தெருவில் செல்வம் அவரது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அவரது மனைவி உமாராணி நேற்று இரவு அருகில் உள்ள கடைக்கு மளிகை பொருட்கள் வாங்குவதற்காக சென்றுள்ளார். அந்த நேரத்தில் மழை விடாது பொழிந்து கொண்டிருந்ததால் சாலை முழுவதும் தண்ணீரில் மூழ்கியது.

இது மிகவும் தாழ்வான பகுதியாக இருப்பதனால் மழை பெய்யும் போது தண்ணீர் தேங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. இதன் அருகிலேயே மின்சார பெட்டி இருந்துள்ளது. இதனால் இது குறித்து ஏற்கனவே மின்வாரியத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை அவர்கள் கண்டு  கொள்ளவில்லை என்று அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் சாலையில் தேங்கிய மழைநீரில் மின்சாரம் பாய்ந்து கடைக்கு சென்ற அந்த பெண் உமாராணி இறந்தார். அவரை மீட்பதற்காக அவரது உறவினர்கள் அருகில் சென்று அவரது உடலை தொடும் போது அவர்களையும் மின்சாரம் தாக்கிய நிலையில் அவர்கள் விலகி சென்றுள்ளனர்.

பின்னர் அவரது கணவர் மூங்கில் கம்பின் மூலம் அவரை மீட்டெடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து உமாராணி உடல் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த சில நாட்களாகவே அந்த பகுதியில் மழை நீரால் மின் கசிவு ஏற்ப்பட்டதும் அதனால்  மின்சாரம் லேசாக ஒரு சில மனிதர்களை தாக்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

மேலும் சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலர் மற்றும் ஊழியர்களுக்கு இந்த மின்கசிவு குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டும் புகார்கள் கொடுக்கப்படும் அவர்கள் எந்தவித நடவடிக்கை எடுக்கத நிலையில் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இறந்தவரின் உறவினர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

' isDesktop="true" id="795242" youtubeid="YusQMkekqOg" category="chennai">

மேலும் இனியாவது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பெண்ணின் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

First published:

Tags: Chennai