2023 புத்தாண்டு கொண்டாட்டம் உலகம் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாப்பட்டது. இந்த கொண்டாடத்திற்கான ஏற்பாடுகள் முதல் நாள் மாலையே களைக்கட்டத் தொடங்குவது வழக்கம்.குறிப்பாக,டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை போன்ற பெருநகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் நட்டசத்திர ஹோட்டல்களிலும், பப்புகளிலும், பண்ணை வீடுகளிலும் மது விருந்து, நடனம் என குஷியாக நடைபெறும்.
சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களிலும் குழு நடனங்கள், ஜோடி நடனங்கள் போன்ற பல்வேறு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்கள் நடைபெற்றது. இதில் பெரும்பாலான இடங்களில் சிங்களாக வர அனுமதி கிடையாது. ஜோடியாக உள்ள வரமுடியும், நடனடிமாட முடியும். எனவே, இதில் ஆர்வத்துடன் கலந்து கொள்ள நினைக்கும் சிங்கிலாக இருக்கும் ஆண்கள் தங்கள் ஜோடியை புதுவகையில் ஏற்படு செய்ததாக தகவல்கள் வந்துள்ளன.
ஆண்களுடன் ஜோடியாக நடனமாடுவதற்கு பெண்களை வாடகை ஜோடியாக புக் செய்யும் விஷயம் அரங்கேறியுள்ளது. புத்தாண்டு இரவில் ஜோடியாக நடனமாட வாலிபர்கள் பெண் அழகிகளை வாடகைக்கு புக் செய்துள்ளனர். இதற்கான கட்டணம் ரூ.5,000 இல் இருந்து ரூ.25,000 வரை இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த அழகிகளை பிக் அப் செய்து விழா கொண்டாட்டத்திற்கு அழைத்து சென்று, அவர்கள் இடத்திலேயே பத்திரமாக டிராப் செய்ய வேண்டும் என்ற டீலுடன்தான் பெண்கள் அழைத்து செல்லப்படுகிறார்கள். பெரு நகரங்களில் இது ஒரு புதிய வணிகமாக உருவெடுத்துள்ளது.
இதற்கிடையே சென்னையில் புத்தாண்டு கொண்டாடத்தை கண்காணிப்பதற்காக 16,000க்கும் மேற்பட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். புத்தாண்டு இரவில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக 252 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dance, New Year Celebration, Party