ஹோம் /நியூஸ் /சென்னை /

முன்னாள் கள்ளக்காதலனை ஆண் நண்பருடன் இணைந்து கொலை செய்து நாடகமாடிய பெண் - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

முன்னாள் கள்ளக்காதலனை ஆண் நண்பருடன் இணைந்து கொலை செய்து நாடகமாடிய பெண் - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

கைதான பிரபு - சௌந்தர்யா

கைதான பிரபு - சௌந்தர்யா

சென்னையில் முன்னாள் கள்ளக்காதலனை ஆண் நண்பருடன் இணைந்து கொலை செய்து நாடகமாடிய பெண்ணை காவல்துறையனிர் கைது செய்துள்ளனர்.

  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னை விருகம்பாக்கம் மேட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் விஜி (எ) விஜயகுமார்(28). இவருக்கும் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சௌந்தர்யா(37) என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு விருகம்பாக்கம் சாரதாம்பாள் தெருவிலுள்ள சௌந்தர்யாவின் வீட்டிலிருந்த )விஜயகுமாரை கழுத்தை கத்தியால் அறுத்து மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு தப்பி ஓடி விட்டதாக விருகம்பாக்கம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை மீட்டு உடற்க்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார், விசாரணையில் சௌந்தர்யா என்பவருக்கு 18 ஆண்டுகளுக்கு முன் நாகராஜ் என்பவருடன் காதல் திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாட்டின் காரணமாக சௌந்தர்யாவும் அவரது கணவர் நாகராஜூம் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும், 14 வயது மற்றும் 12 வயதுடைய தனது இரண்டு மகன்களை தன்னுடனே வைத்துக் கொண்டு சௌந்தர்யா மாநகராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.

முதல்வர் குறித்து அவதூறு போஸ்டர்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் அதிரடி கைது!!

இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமாருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பாக சௌந்தர்யா மற்றும் அவரது  மகன்களை சேர்த்து விருகம்பாக்கம் சாரதாம்பாள் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தந்து விஜி அவர்களுடனே வசித்து வந்துள்ளார்.

இதனிடையே சௌந்தர்யா தான் பணிபுரியும் இடத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வரும் கோடம்பாக்கம் காமராஜர் காலனி 6-வது தெருவை சேர்ந்த பிரபு(40) என்பவரோடு பழக்கம் ஏற்பட்டு பின் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

சுவாதி கொலை வழக்கில் ரூ.3 கோடி இழப்பீடு கேட்டு பெற்றோர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

இந்த விவகாரம் தெரிய வர சௌந்தர்யா மற்றும் பிரபுவுடன் விஜி சண்டை போட்டுள்ளார். நாளடைவில் மூவர்களுக்குள்ளும் பிரச்சனை பெரிதாகியுள்ளது. இந்த நிலையில் நேற்று வீட்டிலிருந்த விஜியை சமாதானப்படுத்துவதாக கூறி சௌந்தர்யா மற்றும் பிரபு ஆகியோர் மது வாங்கி கொடுத்து பின் காய்கறி வெட்டும் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு பின் பிரபுவுடன் சேர்ந்து சௌந்தர்யா பணிக்கு சென்றுள்ளார்.

தனது மகன்கள் மற்றும் தனது அக்காவின் மகன் ஆகிய மூவரிடமும் தாங்கள் இருவரும் பணிக்கு செல்வதாகவும் சிறிது நேரம் கழித்து மூவரும் கடைக்கு சென்று வருவது போல வந்து, விஜியை மர்ம நபர்கள் கொலை செய்து விட்டதாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் சொல்லி அழ வேண்டும் என கூறிவிட்டு சௌந்தர்யா பணிக்குச் சென்றுள்ளார் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதன்படியே இரவு 10:30 மணியளவில் சிறுவர்கள் மூவரும் வீட்டின் வெளியே வந்து தங்களது சித்தப்பாவை மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு சென்று விட்டதாக சத்தம் போட்டு அழுதுள்ளனர்.

பின் திட்டமிட்டபடியே சௌந்தர்யாவுக்கும் சௌந்தர்யாவின் கள்ளக்காதலரான பிரபுவுக்கும் போன் செய்து விவரங்களை கூறியுள்ளனர். பின் ஒன்றுமே நடக்காதது போல் சௌந்தர்யாவும் அவரது இந்நாள் கள்ளக்காதலரான பிரபுவும் வீட்டுக்கு வந்துள்ளனர்.

பின் சௌந்தர்யாவின் இந்நாள் கள்ளக்காதலரான பிரபுவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட பிரபுவை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் தங்களது பணியில் விசாரிக்க விஜியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து சௌந்தர்யா மற்றும் அவரது இந்நாள் கள்ளக்காதலரான பிரபு ஆகியோரை கைது செய்த விருகம்பாக்கம் போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சௌந்தர்யாவின் 14, 12 வயது மகன்கள் மற்றும் சௌந்தர்யாவின் அக்கா மகனான 15 வயது சிறுவன் ஆகிய மூவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Published by:Musthak
First published:

Tags: Crime News