முகப்பு /செய்தி /சென்னை / சென்னைக்கு வந்த விமானத்தில் வங்கதேச பெண்பயணி திடீர் மரணம் - போலீஸ் விசாரணை

சென்னைக்கு வந்த விமானத்தில் வங்கதேச பெண்பயணி திடீர் மரணம் - போலீஸ் விசாரணை

காட்சிப்படம்

காட்சிப்படம்

வங்கதேசத்தில் இருந்து சிகிச்சைக்காக சென்னைக்கு விமானம் மூலம் வந்த பெண், நடுவானில் பரிதாபமாக உயிரிழந்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் முகமது அபு - குர்ஸிதா பேகம் தம்பதி. குர்ஸிதா பேகம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். வங்கதேசத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் குர்ஸிதா பேகம் சிகிச்சை பெற்றுக் குணமடையவில்லை. இதனையடுத்து  சிகிச்சைக்காக இந்தியா வர முடிவு செய்துள்ளனர்.

வேலூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக கணவன் மனைவி இருவரும் வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து  யு.எஸ்.பங்களா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மூலம் சென்னைக்கு வந்துகொண்டு இருந்தனர். இதனிடையே விமானம் நடு வானில் பறந்து கொண்டிருந்த போது, குர்ஸிதா பேகத்திற்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு துடித்துள்ளார்.

அவரின் கணவர் பதற்றத்துடன் விமானப் பணிப்பெண்களிடம் கூறினார். அவர்கள் விமானிக்குத் தகவல் கொடுத்தனர். உடனே விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து, மருத்துவக் குழுவைத் தயார் நிலையில் வைக்கும்படி அறிவுறுத்தினார்.

Also Read : "பாஜகவில் இருந்து ஆட்களை அழைத்து சென்றால்தான் திராவிடக்கட்சிகள் வளரும் என்ற நிலை" - அண்ணாமலை ஆவேசம்!

விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதும் மருத்துவ குழுவினர் விரைந்து அவரை பரிசோதித்தனர். ஆனால் குர்ஸிதா பேகம் தனது இருக்கையிலேயே உயிரிழந்திருந்தார். இதையடுத்து சென்னை விமான நிலைய போலீசார் விரைந்து வந்து, உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்குக் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு 174 பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் - சுரேஷ்

First published:

Tags: Chennai Airport, Heart attack, Woman