ஹோம் /நியூஸ் /சென்னை /

பிஸ்கட்டில் கஞ்சா! புழல் சிறையில் கணவனுக்காக கஞ்சா சப்ளை செய்ய முயன்ற மனைவி..

பிஸ்கட்டில் கஞ்சா! புழல் சிறையில் கணவனுக்காக கஞ்சா சப்ளை செய்ய முயன்ற மனைவி..

புழல் சிறை

புழல் சிறை

பிஸ்கட்டில் 10 கிராம் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

புழல் சிறையில் கணவனுக்காக பிஸ்கட்டில் கஞ்சா கடத்த முயன்ற இளம்பெண்ணை சிறை காவலர்கள் கையும் களவுமான பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

புழல் சிறையில் 3,000க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த புருஷோத்தமன்(24) என்பவர் திருட்டு மற்றும் அடிதடி வழக்குகளில் பள்ளிக்கரணை போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் இவருடைய மனைவி சாவித்திரி(22) நேற்றுமுன் தினம் கணவரை காண சிறைக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. அப்போது கணவனுக்கு தின்பண்டங்கள் கொடுத்து அனுப்பியுள்ளார். சந்தேகமடைந்த சிறை காவலர், பையை சோதனை செய்தனர். அதில் பிஸ்கட்டில் 10 கிராம் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில் சாவித்திரியை கைது செய்யப்பட்டார்.

வாட்ஸ்அப் காதல்: ''வாழ்ந்தா உன்கூட மட்டும்தான்'' சென்னை மாணவரை அடம்பிடித்து கரம்பிடித்த கேரள மாணவி! 

மேலும் புழல் தண்டனை சிறையில் கண்காணிப்பு கோபுரம் அருகே ப்ளாஸ்டிக் பையில் கட்டப்பட்ட கவரில் செல்போன் பேட்டரி மற்றும் சிம் கார்டு கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

First published:

Tags: Ganja, Puzhal jail, Puzhal Prison