ஹோம் /நியூஸ் /சென்னை /

ஏர்போர்ட்டில் அட்டைப்பெட்டையை பார்த்து குரைத்த மோப்பநாய்.. சோதனையில் அதிர்ச்சி.. சிக்கிய வெளிநாட்டு பெண்!

ஏர்போர்ட்டில் அட்டைப்பெட்டையை பார்த்து குரைத்த மோப்பநாய்.. சோதனையில் அதிர்ச்சி.. சிக்கிய வெளிநாட்டு பெண்!

கவ்விப்பிடித்த நாய்

கவ்விப்பிடித்த நாய்

எத்தியோப்பியாவில் இருந்து இந்தியாவுக்கு போதை பொருள் கடத்தி வந்த பெண் கைது செய்யப்பட்டார். மோப்ப நாய் காட்டிக் கொடுத்ததால் போதைப் பொருள் சிக்கியது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னை விமான நிலையத்தில் மோப்ப நாய் காட்டிக் கொடுத்ததன் மூலம், உகாண்டாவைச் சேர்ந்த இளம் பெண் கடத்தி வந்த 5 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் விமானம் மூலம், சென்னை வந்த பயணிகளின் உடமைகளை, விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். எத்தியோப்பியா வழியாக வந்த உகாண்டாவைச் சேர்ந்த 32 வயது பெண்ணிடம் சந்தேகத்தின் பேரில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அங்கிருந்த மோப்ப நாய், அவர் கொண்டு வந்த அட்டைப் பெட்டியைப் பார்த்து குறைத்ததுடன், அதை பிராண்டியது.

இதையடுத்து, அட்டை பெட்டியை அதிகாரிகள் பிரித்து பார்த்த போது, போதைப் பொருளை மறைத்து வைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Also see... மீண்டும் கொரோனா: மத்திய அரசு இன்று ஆலோசனை

பின்னர், 5 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒரு கிலோ 542 கிராம் மெத்தோ குயிலோன் மற்றும் 644 கிராம் ஹெராயின் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சர்வதேச போதைப் பொருள் கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

செய்தியாளார்: சுரேஷ், விமானநிலையம்

First published:

Tags: Airport, Arrested, Chennai, Crime News, Drug addiction