ஹோம் /நியூஸ் /சென்னை /

ஆம்னி பேருந்துகள் வசூலிக்கும் கூடுதல் கட்டணத்தை பயணிகளிடம் திருப்பி கொடுக்க நடவடிக்கை - அமைச்சர் சிவசங்கர் தகவல்

ஆம்னி பேருந்துகள் வசூலிக்கும் கூடுதல் கட்டணத்தை பயணிகளிடம் திருப்பி கொடுக்க நடவடிக்கை - அமைச்சர் சிவசங்கர் தகவல்

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்

Diwali omni Buses | ஆம்னி பேருந்துகள் இணையதளம் மூலமாக அதிக கட்டணம் வசூலிக்கப்படும் என்பதை அறிந்தால் அவற்றை அறிந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்ட பயணியிடம் மீண்டும் டிக்கெட் கட்டணத்தை தாண்டி, மீதி கட்டணத்தை திரும்ப கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது. இன்று முதல் தொடங்கி மூன்று நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சென்னை கோயம்பேடு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

  பேருந்துகள் போதுமான அளவு உள்ளதா மற்றும் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பது குறித்து, பேருந்துகளில் ஏறி ஆய்வு செய்த அமைச்சர் சிவசங்கர், ஆய்விற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  அப்போது அவர், “திருவிழா காலங்களில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பாதுகாப்பான முறையில் பயணிக்க வேண்டி, கூடுதல் பேருந்துகள் சேவை இன்று முதல் தொடங்குகிறது. இன்று (வெள்ளிக்கிழமை) வழக்கமான பேருந்துகள் 2100 உடன், 1430 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இதுவரை 91,000 பேர் தமிழகம் முழுவதும் பயணம் செய்துள்ளனர் “ என தெரிவித்தார்.

  இதையும் படிங்க : சென்னை டிராஃபிக் ஜாமில் இருந்து விடுதலை... போக்குவரத்து நெரிசலை தெரிந்துகொள்ள செயலி அறிமுகம்

  மேலும், நாளையும், நாளை மறுநாளும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக கூறிய அமைச்சர், “ நாளை 1586 மற்றும் நாளை மறுநாள் 1195 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. கடந்த வருட தீபாவளியில் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டு இருப்பவர்கள் 77,000 பேர். இந்த ஆண்டு இதுவரை 1.04,000 பேர் முன்பதிவு செய்து பயணத்தை உறுதி செய்துள்ளனர். இந்த வருடம் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை கூடுதலாக இருக்க கூடும் என்ற கணிப்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

  இவற்றை தாண்டி தேவைப்பட்டால் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் சென்னையில் இருந்து பயணிப்பவர்கள், தங்கள் பகுதியில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல கூடிய பேருந்து நிலையங்களை எளிதில் அடைய கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.  “சென்னையில் 5 பேருந்து நிலையங்கள் இயக்கப்படுகின்றன என்பதை அவ்வபோது அறிவுறுத்தி வருகிறோம், அந்தந்த பேருந்து நிறுத்தங்களுக்கு செல்வதற்காக 150 மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன” என்றும் அவர் குறிப்பிட்டார்.

  இதையும் படிங்க : தீபாவளிக்கு சொந்த ஊருக்கு படையெடுத்த மக்கள்... திணறும் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை...

  தமிழ்நாடு முழுவதும் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் கூடுதலாக வசூல் செய்யப்படுவது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாக தெரிவித்த அமைச்சர், “ குறிப்பிட்ட சில பேருந்துகள் இணையதளம் மூலமாக அதிக கட்டணம் வசூலிக்கப்படும் என்பதை அறிந்தால், அவற்றை அறிந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்ட பயணியிடம் மீண்டும் டிக்கெட் கட்டணத்தை தாண்டி, மீதம் கட்டணத்தை திரும்ப கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

  சிறப்பு பேருந்துகள் பற்றாக்குறை இல்லாத வகையில் இன்று 750 பேருந்துகள் தயார் நிலையில் உள்ளது. தேவைப்பட்டால் கூடுதலாக இந்த பேருந்துகளும் பயன்படுத்தப்படும். மேலும் பயணிகள் பட்டாசுகளை எடுத்து செல்ல கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது, அவ்வாறு எடுத்து செல்வது தெரிந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் கூறினார்.

  Published by:Karthi K
  First published:

  Tags: Chennai, Deepavali, Diwali, Omni Bus