ஹோம் /நியூஸ் /சென்னை /

போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் - காவல்துறைக்கு முதலமைச்சர் உத்தரவு

போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் - காவல்துறைக்கு முதலமைச்சர் உத்தரவு

முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின்

கஞ்சா, குட்கா தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோரின் சொத்துகளைப் பறிமுதல் செய்யவேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

போதைப் பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கிட வேண்டும் என காவல்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். போதைப் பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார்.

அப்போது கஞ்சா, குட்கா தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோரின் சொத்துகளைப் பறிமுதல் செய்யவேண்டும் என அறிவுறுத்தினார். பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பிரசாரங்களை அதிகப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தொடர் குற்றங்களில் ஈடுபடுவோரிடம் உறுதிமொழி பெறுவது கட்டாயமாக்கப்பட வேண்டும் எனவும், கஞ்சா, குட்கா வழக்குகளில் உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தண்டனை பெற்றுத்தர வேண்டும் எனவும் முதல்வர் குறிப்பிட்டார்.

மருந்துவகை போதை பொருட்களை கட்டுப்படுத்துவதற்காக, மருந்துக் கடைகளிலும் தீவிர சோதனை நடத்திட வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

First published:

Tags: CM MK Stalin, Drug addiction, Tamilnadu police