Home /News /chennai /

கணவன் கழுத்தை நெறித்துக்கொன்று நாடகமாடிய மனைவி - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

கணவன் கழுத்தை நெறித்துக்கொன்று நாடகமாடிய மனைவி - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

கணவனை கொன்ற பெண்

கணவனை கொன்ற பெண்

Chennai :கணவனை கொலை செய்து விட்டு மயங்கி விழுந்து இறந்ததாக நாடகமாடிய மனைவியை வளசரவாக்கம் போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வளசரவாக்கத்தில்  கணவரை கொலை செய்து விட்டு குடிபோதையில் இறந்ததாக நாடகமாடிய மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

    வளசரவாக்கம், வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் குமார்(50), எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். இவரது மனைவி விஜயா(40), வீட்டு வேலை செய்து வந்தார். இவர்களது இரண்டு பிள்ளைகள் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. குடிப்பழக்கம் உடைய குமார் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 3 ம் தேதி குடித்து விட்டு வீட்டிற்கு வந்தவர் மயங்கி விழுந்து இறந்து விட்டதாக அவரது மனைவி விஜயா வளசரவாக்கம் போலீசில் தகவல் தெரிவித்தார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இறந்து போன குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் குமார் சாவில் போலீசாருக்கு சந்தேகம் இருந்ததால் விஜயாவிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். போலீசாரின் கிடுக்கு பிடி விசாரணையில் கணவரை கொலை செய்ததை விஜயா ஒப்புக்கொண்டார். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையில் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    Also Read: தங்கையின் கள்ளக்காதலனை கத்தியால் தலையில் வெட்டிய அண்ணன் கைது

    இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது, குடிப்பழக்கம் உடைய குமார் தினமும் குடித்துவிட்டு மனைவி விஜயாவிடம் தகராறு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று குடிபோதையில் வந்த குமார் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஜயா கணவரின் கழுத்தை நெரித்து கீழே தள்ளியதில் குமார் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்து போனது தெரியவந்தது. மேலும் போலீசாரிடம் சிக்காமல் இருக்க கணவர் குடிபோதையில் தவறி விழுந்து இறந்து விட்டதாக நாடகமாடியதும் தெரியவந்துள்ளது.

    மேலும் விஜயாவின் செல்போனை பறிமுதல் செய்து பார்த்தபோது அதில் வேறு ஒரு நபருடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது. எனவே இந்த கொலை சம்பவத்தில் அந்த நபருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். குடிபோதையில் தகராறு செய்த கணவனை கொலை செய்து விட்டு மயங்கி விழுந்து இறந்ததாக நாடகமாடிய மனைவியை வளசரவாக்கம் போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த வழக்கை தற்போது கொலை வழக்காக போலீசார் பதிவு செய்துள்ளனர்.

    செய்தியாளர்: சோமசுந்தரம்
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Chennai, Crime News, Husband Wife, Police, Police arrested

    அடுத்த செய்தி