ஹோம் /நியூஸ் /சென்னை /

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு அனுப்பாத கணவர்.. விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட மனைவி.. சென்னையில் அதிர்ச்சி!

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு அனுப்பாத கணவர்.. விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட மனைவி.. சென்னையில் அதிர்ச்சி!

மாதிரி படம்

மாதிரி படம்

திருமணமான ஓராண்டில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai [Madras] | Chennai | Tamil Nadu

  சென்னை வடபழனியில் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு கணவர் அனுப்பாததால் விரக்தியில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  சென்னை வடபழனி அழகர் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த விவேக்கிற்கும் (29), அவரது உறவினரான 27 வயது இளம்பெண்ணுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.

  அடிக்கடி கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டும் என இளம்பெண் கணவரிடம் கேட்டுள்ளார். இதற்கு கணவர் விவேக் மறுப்பு தெரிவித்ததால் மனைவி விரக்தியில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த விவேக் மனைவியை மீட்டு மருத்துவமனை அனுமதித்தார்.

  அங்கு சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் நேற்று முன் தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Chennai, Crime News, Suicide