முகப்பு /செய்தி /சென்னை / பர்தா அணிந்து நகைக்கடையில் நூதன முறையில் திருட்டு.. சென்னையில் தாய், மகன் கைது..!

பர்தா அணிந்து நகைக்கடையில் நூதன முறையில் திருட்டு.. சென்னையில் தாய், மகன் கைது..!

கைதான தாய், மகன்

கைதான தாய், மகன்

Crime News : சென்னையில் பர்தா அணிந்து நகைக்கடையில் நூதன முறையில் நகைகள் திருடிய தாய், மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சென்னை திருவல்லிக்கேணி  குப்புமுத்து தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (43). இவர் அதே பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக எம்.எம்.ஜுவல்லரி என்ற பெயரில் தங்க நகை நகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் 6ம் தேதி ராஜேஷ் கடைக்கு பர்தா அணிந்து வந்த இருவர் நகை வாங்குவது போல் வந்துள்ளனர். அப்போது ராஜேஷிடம் புதிய மாடல் உள்ள வளையல்களை காண்பிக்கும் படி கேட்டுள்ளனர். உடனே கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த மகேஷ் என்பவர் வளையல்களை எடுத்து அந்த இரு பெண்களிடம் காண்பித்துள்ளார்.

இந்நிலையில், வளையல்களை பார்த்துக் கொண்டிருந்த பர்தா அணிந்த 2 பேரும் சிறிது நேரத்தில் திரும்பி வருவதாக கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். உடனே மகேஷ் தான் வைத்திருந்த வளையல்களை சோதனை செய்து பார்த்தபோது அதில் ஒரு தங்க வளையல் குறைந்து இருப்பது தெரியவந்தது. உடனே இது தொடர்பாக ராஜேஷ் ஜாம்பஜார் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஜாம்பஜார் போலீசார் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது மயிலாடுதுறை மாவட்டம், குரைநாடு மேல்வட்ட சரகு 6வது தெரு பகுதியை சேர்ந்த கவிதா (50) மற்றும் அவரின் மகன் கௌதம் (25) மற்றும் ஷீலா தேவி ஆகியோர் என தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கு சென்ற சென்னை ஜாம்பஜார் தனிப்படை போலீசார் கவிதா மற்றும் அவரது மகன் கௌதம் ஆகிய இருவரையும் கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

Also Read : 4 மாத பச்சிளங்குழந்தையை கொன்று புதைத்த கொடூர தந்தை... தாம்பரம் அருகே பகீர் சம்பவம்..!

மேலும், இந்த திருட்டு வழக்கில் தொடர்பாக தலைமுறையாக உள்ள ஷீலா தேவியை ஜாம்பஜார் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கவிதா மீது திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, மதுரை, புதுக்கோட்டை, திண்டிவனம் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட காவல் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. அதேபோல் கவிதாவின் மகன் மீது கடலூர் மாவட்டம் திருப்பாப்புலியூர் பகுதி காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கு உள்ளது தெரிய வந்தது. இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

First published:

Tags: Chennai, Crime News, Local News