நாங்கள் கொண்டுவந்த ஜிஎஸ்டி வேறு தற்போது உள்ள ஜிஎஸ்டி வேறு என காங்கிரஸ் எம்.பி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் காங்கிரஸ் பொருளாதார மாடல் எனும் கருத்தரங்கில் கலந்துகொண்ட முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது, சீனா பொருளாதாரத்தையும், இந்திய பொருளாதாரத்தையும் ஒப்பிட முடியாது. இந்தியப் பொருளாதாரம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது என்று கூறப்பட்டாலும், சீனா நமக்கு மிக தொலைவில் உள்ளது. நாம் இன்னும் ஏழை நாடுதான்.
சீன பொருளாதாரத்தை விட இந்திய பொருளாதாரம் மிக வேகமாக சென்று கொண்டிருக்கிறது என்ற கூற்றை ஏற்க முடியாது. 25 சதவீத இந்திய மக்களிடம் சைக்கிள், இருசக்கர வாகனம், கார் தற்போது வரை இல்லை. 2021 -22ல் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி வெறும் 4 சதவீதம் தான் உள்ளது.
காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் வேலைவாய்ப்புகளில் மிக முக்கிய கவனம் செலுத்தப்படும். நிலையான வருமானம் வேலை உறுதி ஆகியவற்றுடன் கூடிய வேலைக்கு உறுதி செய்யப்படும். பக்கோடா விற்பதை நாங்கள் வேலை வாய்ப்பு என்று சொல்ல மாட்டோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களால் மூன்றாம் வகுப்பு படிக்கக் கூடிய புத்தகங்களை வாசிக்க முடியவில்லை என சமீபத்தில் ஆய்வு அறிக்கை வெளியாகி உள்ளது. சுகாதாரம் மற்றும் கல்வியில் கவனம் செலுத்தப்படும்.
2ம் ஆண்டு படிக்கக் கூடிய பொறியியல் கல்லூரி மாணவியால் ஒரு வார்த்தைகூட ஆங்கிலத்தில் தெளிவாக பேச முடியவில்லை. அவருக்கு என்ன மாதிரியான கல்வி கற்றுக் கொடுக்கப்படுகிறது? தற்போது கல்வியானது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் இது மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டிய நேரம் இது. அதேபோன்று சுகாதாரமும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.
இந்தியாவில் 20 சதவீத மக்கள் மட்டுமே நிலையான வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். நாங்கள் கொண்டுவந்த ஜிஎஸ்டி வேறு தற்போது உள்ள ஜிஎஸ்டி வேறு, தற்போது உள்ள ஜிஎஸ்டி முழுமையாக நீக்கப்பட வேண்டிய ஜிஎஸ்டி என்று அவர் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chidambaram, P.chidambaram