கிழக்கு தாம்பரம் சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் இந்திய வரலாற்று பேரவையின் 81வது மாநாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாநாட்டில் உரையாற்றிய அவர், வரலாற்று உணர்வை ஊட்டுதல் மற்றும் அறிவியல் பார்வையை உருவாக்குதலே இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது என்றும், நம்மை நாமே அறிந்து கொள்வதற்காக வரலாற்றை படிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
அறிவுப்பூர்வமான, ஆதாரப்பூர்வமான வரலாற்றை நாம் பேச வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தினார். உண்மையான வரலாற்றை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை அரசு செய்து வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். கற்பனை கதைகளை சிலர் வரலாறுகளாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இன்று நாட்டை சூழ்ந்துள்ள ஆபத்து என்பது இந்த வரலாற்று திரிபுதான் என்றும் முதல்வர் குறிப்பிட்டார். மேலும் தமிழர்கள் பழமை விரும்பிகளாக இருந்தாலும் பழமைவாதிகள் அல்ல என தெரிவித்தார்.
மதச்சார்பின்மை என்பது நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைத் தன்மை. அதை எந்த வகையிலும் மீறுவதை அனுமதிக்க முடியாது. எந்தவொரு கட்சியையும் மதவாத கட்சியாக இயங்க அனுமதிக்கக் கூடாது என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உட்பட பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, CM MK Stalin, MK Stalin, Religion