ஹோம் /நியூஸ் /சென்னை /

அதிமுகவின் உண்மையான பொதுச்செயலாளர் யார்? ஒரு வரியில் பதில் கொடுத்த சசிகலா!

அதிமுகவின் உண்மையான பொதுச்செயலாளர் யார்? ஒரு வரியில் பதில் கொடுத்த சசிகலா!

சசிகலா

சசிகலா

Sasikala pressmeet | எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு சசிகலா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras] | Chennai

அதிமுகவின் உண்மையான பொதுச்செயலாளர் நான்தான் என்றும், தொண்டர்களின் முடிவே இறுதியானது என்றும் சசிகலா தெரிவித்துள்ளார்.

சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில், சசிகலா மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து அங்குள்ள மேடையில் உறுதிமொழி ஏற்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவுக்கும் எனக்கும் சொந்தமில்லை என யாராலும் சொல்ல முடியாது என ஆவேசமாக தெரிவித்தார். அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் தொடர்பில்லை என ஜெயக்குமார் கூறிய கருத்துக்கு பதிலளித்தார்.

நான் தான் உண்மையான பொதுச்செயலாளர் என கூறிய அவர், அதிமுக யாருக்கு சொந்தம் என தொண்டர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் பேசினார்.

மேலும், எம்ஜிஆர் தொடங்கிய அதிமுகவை தொடர்ந்து வளர்ச்சி பாதையிலேயே பயணித்துள்ளது. அதனால் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

First published:

Tags: ADMK, Chennai, MGR, V K Sasikala, VK Sasikala