முகப்பு /செய்தி /சென்னை / பாலியல் தொழிலில் போலீஸ் தொல்லை; பிளானை மாற்றி கொள்ளையடிக்கும் தொழிலுக்கு மாறிய கும்பல்!

பாலியல் தொழிலில் போலீஸ் தொல்லை; பிளானை மாற்றி கொள்ளையடிக்கும் தொழிலுக்கு மாறிய கும்பல்!

ஓய்வு பெற்ற விமான அதிகாரி வீட்டில், 70 சவரன் தங்க நகை, பல லட்ச ரூபாய் மதிப்பிலான வைர நகைகளை கொள்ளையடித்து சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஓய்வு பெற்ற விமான அதிகாரி வீட்டில், 70 சவரன் தங்க நகை, பல லட்ச ரூபாய் மதிப்பிலான வைர நகைகளை கொள்ளையடித்து சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஓய்வு பெற்ற விமான அதிகாரி வீட்டில், 70 சவரன் தங்க நகை, பல லட்ச ரூபாய் மதிப்பிலான வைர நகைகளை கொள்ளையடித்து சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu | Chennai

சென்னையில் பாலியல் தொழில் செய்து வந்த 3 பேர் கொண்ட கும்பல், போலீசார் அடிக்கடி கைது செய்வதால் மாற்று தொழிலாக கொள்ளையடிக்கும் தொழிலுக்கு மாறியுள்ளனர். 2017ஆம் ஆண்டு முதல் கொள்ளையடித்து வரும் இந்த கும்பல், இந்த முறை வசமாக சிக்கியுள்ளது.

விருகம்பாக்கம் வெங்கடேஸ்வரா நகர் முதல் தெருவில் வசித்து வருபவர் குமார் சுப்பிரமணியன்(61). முன்னாள் விமானப்படை அதிகாரியான இவர் கடந்த மாதம் தனது மனைவியோடு சுற்றுலாவுக்காக வடமாநிலங்களுக்கு சென்றுள்ளார்.

இவரது மகனும் கடந்த மாதம் 25ஆம் தேதி பணி நிமித்தமாக புனேவுக்கு சென்று 26 ஆம் தேதி காலை சென்னை வந்துள்ளார். வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 70 சவரன் தங்க நகைகள், பல லட்சம் மதிப்புள்ள வைர நகைகள், பல லட்சம் பணம், லேப்டாப் மற்றும் மின்னணு பொருட்கள் போன்றவை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

ALSO READ | பாலியல் தேவைக்காக அரங்கேறிய கொலை - நடந்தது என்ன? பகீர் வாக்குமூலம்!

மகன் அளித்த தகவலின் படி குமார் சுப்பிரமணியன் தனது மனைவியோடு சென்னை வந்துள்ளார். இது குறித்து அவர் விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்க, போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த குட்டி (எ) சிவ விநாயகம்(43) என்பவரை கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்த 17 சவரன் நகைகள் மற்றும் 9 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் நண்பர்களுடன் கூட்டாக கொள்ளையில் ஈடுபட்டதாக தெரிவித்ததையடுத்து, கொடுங்கையூரைச் சேர்ந்த உலகநாதன்(44) மற்றும் நித்தியா(32) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், நகைகளை சேலத்தில் உள்ள தனியார் நகைக்கடையில் விற்பனை செய்ததாக தெரிவித்ததையடுத்து, போலீசார் நகைகளை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியது. அதில், மூவரும் இதற்கு முன்பாக பாலியல் தொழில் செய்து வந்ததாகவும், அடிக்கடி போலீஸ் கைது செய்து வந்ததால், மாற்று தொழிலாக கடந்த 2017ஆம் ஆண்டு முதல் கொள்ளையடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

ALSO READ | பொதுமக்கள் கண்ணியத்துக்கு இழுக்கு.. கோவை 360 யூ டியூப் சேனல் மீது வழக்குப் பதிவு

மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார், கொள்ளை அடித்த நகைகளை விற்பனை செய்வதற்கு உதவியாக இருந்த நித்யாவின் நண்பர் ரமேஷை தீவிரமாக தேடி வருகின்றனர்.

First published:

Tags: Arrest, Chennai, Theft