நடிகர் மயில்சாமி கடந்த 18ஆம் தேதி இரவு மகா சிவராத்திரியன்று கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலில் விடிய விடிய சாமி தரிசனம் செய்து விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அங்கு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே காலமானார். இந்த சம்பவம் திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அவர் கடைசி சிவராத்திரி இரவு காட்சிகள், கடைசியாக டப்பிங் செய்த காட்சிகள் என அனைத்தும் இணையத்தில் உலாவி வருகின்றன.
இவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து திரையுலகினர், பொதுமக்கள் என பலரும் நேரில் மயில்சாமிக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், நடிகர் விஜயகாந்தின் சார்பில், அவரது மகன் விஜய பிரபாகரன் மயில்சாமியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். நடிகர் மயில்சாமியின் உடல், சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் மயானத்தில் இன்று தகனம் செய்யப்படுகிறது.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய இழப்பு இது, மயில்சாமி அவர்கள் மிகவும் திறமையானவர் , விஜயகாந்துடன் பல படங்களில் நடித்தவர் , சாலிகிராமம் முழுவதும் பல நலத்திட்டங்கள் செய்தவர் , விஜயகாந்த் மீது அன்பும் மரியாதையும் கொண்டவர் , எங்கள் குடும்ப நண்பர், மயில்சாமியை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்தார்.ட்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Mayilsamy, Vijaya Prabhakaran, Vijayakanth