ஹோம் /நியூஸ் /சென்னை /

ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்த விஜய்.. பனையூருக்கு படையெடுத்த ரசிகர்கள்..!

ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்த விஜய்.. பனையூருக்கு படையெடுத்த ரசிகர்கள்..!

விஜய் ரசிகர்கள்

விஜய் ரசிகர்கள்

இந்த நிகழ்வுக்காக சுமார் 500க்கும் மேற்பட்ட ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகத்திற்கு வந்துள்ளனர். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

நடிகர் விஜய் சேலம், நாமக்கல், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த தனது ரசிகர்களை சந்தித்து பேசுகிறார்.

நடிகர் விஜய் தன்னுடைய ரசிகர்களை ஒன்றிணைக்க விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். அதன் மூலம் அவ்வப்போது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டு வந்தார்.  ஆனால் இந்த நிகழ்வு கொரோனா காலகட்டத்திற்கு பிறகு நடக்காமல் இருந்தது.

இந்த நிலையில் இன்று சேலம், நாமக்கல், காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த தன்னுடைய ரசிகர்களை விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் சந்தித்து பேசுகிறார்.  அத்துடன் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். இதில் விஜய் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டு தெரிந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது. அதே சமயம் சில அறிவுரைகளையும் அவர்களுக்கு வழங்க உள்ளார் என தெரிவிக்கின்றனர்.

இந்த நிகழ்வுக்காக சுமார் 500க்கும் மேற்பட்ட ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகத்திற்கு வந்துள்ளனர்.  அவர்களுக்கு பிரியாணி விருந்து அளிக்கிறார் விஜய். மேலும் உள்ளே செல்லும் ரசிகர்களிடம் கைபேசிகள் வெளியே வாங்கி வைத்துக் கொள்ளப்படுகின்றன. அவர்களுக்கு புகைப்படம், ஆதார் எண், தொகுதி, பதவி ஆகியவற்றுடன் கூடிய அடையாள அட்டை   வழங்கப்பட்டுள்ளது.

Published by:Siddharthan Ashokan
First published:

Tags: Actor Vijay, Vijay makkal iyakkam