ஹோம் /நியூஸ் /சென்னை /

''விஜய் அரசியலுக்கு வர வேண்டும்..'' தங்கத் தேர் இழுத்து வழிபாடு நடத்திய ரசிகர்கள்!

''விஜய் அரசியலுக்கு வர வேண்டும்..'' தங்கத் தேர் இழுத்து வழிபாடு நடத்திய ரசிகர்கள்!

தங்க தேர் இழுத்து வழிபட்ட ரசிகர்கள்

தங்க தேர் இழுத்து வழிபட்ட ரசிகர்கள்

விஜய் சினிமாவைப் போல் அரசியலிலும் வெற்றி அடைய வேண்டும் எனவும் திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என அவருடைய ரசிகர்கள் திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் தங்கத் தேர் இழுத்து வழிபட்டனர்.

விஜய் சினிமாவிற்கு வந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு அவருடைய ரசிகர்கள் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் செய்து வருகின்றனர். அந்த வகையில் சென்னையைச் சேர்ந்த ரசிகர்கள் சிலர் நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் எனவும் சினிமாவைப் போல் அரசியலிலும் வெற்றி அடைய வேண்டும் எனவும் திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தனர்.

இதையும் படிக்க :  ''அஜித், விஜய் ரசிகர்கள் மோசம்.. இப்படி தான் பண்ணுவாங்க'' - ஃபேன்ஸ் குறித்து பேசிய ஹெச்.வினோத்

அதேபோல தென் சென்னை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் அடையாறு மகப்பேறு மருத்துவமனையில் 30 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினர். விஜய் மக்கள் இயக்க மாநில நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்தார். சாலையோர ஆதரவற்ற மக்களுக்கு குளிர்காலத்தை முன்னிட்டு இலவச போர்வைகள் வழங்கப்பட்டன. குழந்தைகளுக்கு பால், முட்டை, ரொட்டி ஆகியவையும் பல்வேறு இடங்களில் வழங்கப்பட்டன.

First published:

Tags: Actor Vijay, Chennai, Thalapathy vijay, Vijay fans, Vijay Politics