ஹோம் /நியூஸ் /சென்னை /

விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி தற்கொலை செய்தது ஏன்..? தாம்பரத்தில் போலீசார் விசாரணை..!

விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி தற்கொலை செய்தது ஏன்..? தாம்பரத்தில் போலீசார் விசாரணை..!

தற்கொலை செய்துகொண்டவர்

தற்கொலை செய்துகொண்டவர்

Tambaram Vijay Fan Suicide : தாம்பரத்தில் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி தற்கொலை செய்தது தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னை மேற்கு தாம்பரம் அற்புதம் நகர் குளக்கரை தெருவை சேர்ந்தவர் கருப்புசாமி(27), விஜய் மக்கள் இயக்கத்தில் தாம்பரம் 38-வது வார்டு செயலாளராக உள்ளார். இவர் அதிக குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. இதனால் கருப்பசாமிக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை.

இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அவரின் தாய் சின்னமா கருப்பு சாமியை மது குடிக்க வேண்டாம் என கண்டித்துள்ளார். இதனால் மது போதையில் இருந்த கருப்பசாமி சண்டை போட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.

அதன் பின்பு அதே பகுதியில் உள்ள விநாயகா டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் சரவணன் என்பவரிடம் லாரி ஓட்டுனராக வேலை பார்த்துக் கொண்டு அங்கு உள்ள இடத்திலே தங்கி வந்துள்ளார்.

இதையும் படிங்க : மாவா விற்பதை போலீசில் போட்டு கொடுத்தவர் மீது கொடூர தாக்குதல்... சென்னையில் பயங்கரம்!

இதற்கிடையில், அதிக மது போதையில் கருப்புசாமி அவர் தாய் சின்னமாவுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறிவிட்டு செல்போனை துண்டித்து உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சின்னம்மா கருப்புசாமி தங்கிருக்கும் இடத்திற்கு சென்று பார்த்தபோது புடவையால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இறந்து கிடந்துள்ளார்.

பின்னர் இதுகுறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற தாம்பரம் போலீசார் அவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து தாம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

செய்தியாளர் : சுரேஷ் - சென்னை

தற்கொலை தீர்வல்ல: மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

First published:

Tags: Chennai, Crime News, Local News