முகப்பு /செய்தி /சென்னை / அதிவேகமாக வந்த கார் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு... டிஎஸ்பி மகன் உட்பட 4 பேர் கைது

அதிவேகமாக வந்த கார் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு... டிஎஸ்பி மகன் உட்பட 4 பேர் கைது

விபத்து ஏற்படுத்திய கார்

விபத்து ஏற்படுத்திய கார்

Dsp Son Arrest | மது போதையில் அதிவேகமாக காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய டிஎஸ்பி மகனிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சாலையோரம் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தவர் மீது கார் மோதியதில் டீக்கடைக்காரர் பலியான சம்பவத்தில் மது போதையில் டிஎஸ்பி மகன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம்,அத்தி வெட்டி கிராமத்தை சேர்ந்தவர் மதன்(30) இவர் கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் டீக்கடை நடத்தி வருகிறார்.நேற்று நள்ளிரவு  2 மணி அளவில் கடையை மூடிவிட்டு சாலையோரம் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தார். அப்போது சென்னையிலிருந்து அதிவேகத்தில் மாமல்லபுரம் நோக்கி சென்ற கார் மதன் மீது மோதியது.

சத்தம் கேட்ட அப்பகுதி சேர்ந்த மக்கள் ஓடிவந்து பார்த்தபோது மதன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.  பின்னர் அதிவேகமாக வந்த கார் நீலாங்கரை பகுதியில் திமுக பிரமுகரின் ஒருவரின் இல்ல நிகழ்ச்சி சாலையோரமாக கொடி நட்டு கொண்டிருந்த  அதே பகுதியைச் சேர்ந்த சங்கர்(50) என்பவர் மீது மோதியதில் அவர் படுகாயமடைந்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்த மதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நடத்திய விசாரணையில் மேலும் மதுபோதையில் கார் ஓட்டி வந்தது வேலூர் மாவட்டம் காவல்துறை டிஎஸ்பி தங்கவேலு மகன் அன்பரசு(25) என்பதும் அவருடன் நரேஷ் வரன் (27) ஆனந்த் (27) ஹிட்லர்(23) ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர்: வினோத் கண்ணன்

First published:

Tags: Chennai, Crime News