ஹோம் /நியூஸ் /சென்னை /

''தமிழ்நாடு வாழ்க''.. குடியரசு தின விழாவில் செய்தித்துறை சார்பில் அணிவகுத்த வாகனம்!

''தமிழ்நாடு வாழ்க''.. குடியரசு தின விழாவில் செய்தித்துறை சார்பில் அணிவகுத்த வாகனம்!

செய்தித்துறையின் அணிவகுப்பு வாகனம்

செய்தித்துறையின் அணிவகுப்பு வாகனம்

தமிழக ஆளுநருக்கு கொடுக்கப்பட்ட அணிவகுப்பில் ’தமிழ்நாடு வாழ்க’ என எழுதப்பட்ட வாகனம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India

நாட்டின் 74ஆவது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மூ டெல்லி செங்கோட்டையிலும், தமிழ்நாடு ஆளுநர் சென்னையிலும் தேசிய கொடியை ஏற்றினர். இதில் சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில் தமிழ்நாடு வாழ்க என அணிவகுத்த வாகனம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

வழக்கமாக காந்தி சிலைக்கு முன் தமிழக ஆளுநர் தேசிய கொடியை ஏற்றி வைப்பார். ஆனால் அங்கு மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவதால், இந்த முறை உழைப்பாளர் சிலை அருகில் கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர்.என் ரவி. அதன்பிறகு ராணுவப்படை, கடற்படைப்பிரிவு, வான் படை பிரிவு என மொத்தம் 49 அணிவகுப்புகள் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் இடம்பெற்றது. அதில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் பங்கேற்கும் வாகனத்தில் ’தமிழ்நாடு வாழ்க’ என்ற எழுத்தால் வரையப்பட்ட ரங்கோலி கோலத்தை முகப்பாக கொண்டு வடிவமைக்கப்பட்ட வாகனம் அணிவகுத்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

சுமார் 6800 போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நிலையில் தனது மனைவியுடன் வருகை தந்து கொடியை ஏற்றி வைத்தார் ஆளுநர்.

First published:

Tags: Chennai, CM MK Stalin, Republic day, RN Ravi