Home /News /chennai /

கனமழையால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு.. கேரட், எலுமிச்சை, முருங்கை கிலோ ரூ.100க்கு விற்பனை

கனமழையால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு.. கேரட், எலுமிச்சை, முருங்கை கிலோ ரூ.100க்கு விற்பனை

காய்கறி

காய்கறி

Chennai | தக்காளி 1 கிலோ 60, முருங்கைக்காய் 1கிலோ,100-க்கும், கேரட் 1கிலோ 100-க்கும்,எலுமிச்சை 1கிலோ 100-க்கும் விலை அதிரடியாக உயர்ந்தது. இந்த நிலையில் தமிழக அரசின் நுகர்வோர் பண்ணை பசுமை கடைகளில் 1 கிலோ தக்காளி 40 முதல் 45 க்கு சிறப்பு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
    தமிழகத்தில் ஆங்காங்கே பெய்து வரும் கனமழை காரணமாகவும் கர்நாடக மாநிலத்தில் கொட்டி தீர்த்து வரும் கனமழையாலும் கோயம்பேடு மார்கெட்டுக்கு வரும் காய்கறிகள்
    வரத்து குறைந்துள்ளது. இதனால் அத்தியாவசிய காய்கறிகள்  விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

    கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வழக்கமாக7000 டன் அத்தியாவசிய காய்கறி வருகை உள்ள நிலையில் இன்று 4000 டன் மட்டுமே வந்தது.  3000 டன் குறைந்து வந்ததின் காரணமாக காய்கறிகளின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. அதேபோல் சென்னையின் தேவைக்கு 1200 டன் தக்காளி தேவைப்படும் நிலையில் 480 டன் மட்டுமே வருகை உள்ள நிலையில் தொடர்ந்து தக்காளி விலை உயர்ந்து கோயம்பேட்டில் 60 ரூபாய்க்கும் சென்னையின் புறநகர் பகுதிகளில் 70 முதல் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தக்காளி 1 கிலோ 60, முருங்கைக்காய் 1கிலோ,100-க்கும், கேரட் 1கிலோ 100-க்கும்,எலுமிச்சை 1கிலோ 100-க்கும் விலை அதிரடியாக உயர்ந்தது. அதேபோல் 5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட புதினா கொத்தமல்லி 15 ருபாய்க்கு விற்பனையாகிறது. இந்த நிலையில் தமிழக அரசின் நுகர்வோர் பண்ணை பசுமை கடைகளில் 1கிலோ தக்காளி 40 முதல் 45 க்கு சிறப்பு விற்பனை செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் கனமழை மற்றும் காய்கறிகளின் வரத்து குறைவு, டீசல் தட்டுப்பாடு உள்ளிட்டவைகளை சுட்டிக்காட்டி வியாபாரிகள் காய்கறிகளின் விலையை உயர்த்தி விற்பனை செய்வதாகவும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

    Also see...வேலூரில் முடி வெட்டிக் கொண்டு பணம் இல்லை என கூரிய இளைஞர் கழுத்து அறுத்துக் கொலை

    07.09.2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம் கிலோ 1 க்கு விலைபட்டியல்

    வெங்காயம் 20/18/14
    நவீன் தக்காளி 60
    நாட்டு தக்காளி 50/48
    உருளை 30/22/20
    சின்ன வெங்காயம் 40/30/25
    ஊட்டி கேரட் 90/85/70
    பெங்களூர் கேரட் 50/45
    பீன்ஸ் 60/50
    பீட்ரூட். ஊட்டி /55.50
    கர்நாடக பீட்ரூட் 30
    சவ் சவ் 25/20
    முள்ளங்கி 30/25
    முட்டை கோஸ் 20/15
    வெண்டைக்காய் 30/30
    உஜாலா கத்திரிக்காய் 20/15
    வரி கத்திரி 15/12
    காராமணி 40
    பாவக்காய் 35/25
    புடலங்காய் 25/20
    சுரக்காய் 30/25
    சேனைக்கிழங்கி 25/22
    முருங்ககாய் .90/80
    சேமகிழங்கு 40/35
    காலிபிளவர் 30/25
    வெள்ளரிக்காய் 20/15
    பச்சை மிளகாய் /35/20
    பட்டாணி 170/150
    இஞ்சி 60/40
    பூண்டு 100/90/40
    அவரைக்காய் 35/35
    மஞ்சள் பூசணி 10
    வெள்ளை பூசனி.10
    பீர்க்கங்காய் /60
    எலுமிச்சை 120/100
    நூக்கள் 30/25
    கோவைக்காய் 18/15
    கொத்தவரங்காய் 30
    வாழைக்காய் 8/5
    வாழைதண்டு,மரம் 40
    வாழைப்பூ 20
    பச்சைகுடமிளகாய்
    35/20
    வண்ண குடமிளகாய் 180
    கொத்தமல்லி 15
    புதினா 6
    கருவேப்பிலை 15
    அனைத்து கீரை./9
    தேங்காய் . 30/28
    மாங்காய். 120/70
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Chennai, Koyambedu, Vegetables

    அடுத்த செய்தி