சென்னையின் முக்கிய காய்கறி சந்தையான கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை கணிசமாக குறைந்தது.
கோயம்பேடு காய்கறி சந்தையில் மாண்டஸ் புயில் காரணமாக கடந்த சில தினங்களாக காய்கறிகளின் விலை சற்று உயர்ந்தும் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. தற்பொழுது வரத்து சீராக உள்ள நிலையில் தக்காளி வரத்து குறைந்துள்ளது. சென்னையின் தேவையை பூர்த்தி செய்ய 1200 டன் தக்காளி தேவை உள்ள நிலையில் 700 டன் மட்டுமே இன்று வந்துள்ளது. 500 டன் வரத்து குறைவால் ஒரே நாளில் 1 கிலோவுக்கு 10 ரூபாய் அதிரடியாக தக்காளியின் விலை உயர்ந்து ஒரு கிலோ 30 வரை விற்பனையாகிறது.
இதர அத்தியாவசிய அனைத்து காய் கறிகள் 7000 டன் அளவில் 1000 டன் கூடுதலாக வருகை தந்துள்ள நிலையில் அனைத்து அத்தியாவசிய காய்கறிகளின் விளையும் கணிசமாக குறைந்துள்ளது. 2000 கிலோ அளவிற்கு திடீர் வரத்து அதிகரிகரித்ததால் 250 ரூபாய் வரை கடந்த வாரங்களில் விற்பனை செய்ய்யப்பட்ட முருங்கைக்காய் இன்று 1கிலோ 100 மற்றும் 120 க்கு குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய அனைத்து காய் கறிகளின் விலை நிலவரம் 1 கிலோ விலைபட்டியல்.
மகாராஷ்டிரா வெங்காயம் 24/20/18
ஆந்திரா வெங்காயம் 14/13
நவீன் தக்காளி 30
நாட்டு தக்காளி 30/25
உருளை 30/25/23
சின்ன வெங்காயம் 100/70/50
ஊட்டி கேரட் 50/40/35
பெங்களூர் கேரட் 30
பீன்ஸ் 30/25
பீட்ரூட். ஊட்டி 35/30
கர்நாடக பீட்ரூட் 25/20
சவ் சவ் 13/10
Also see... நீர்த்துப் போன புயலை பேரிடர் என பில்டப் செய்வதா? பழனிசாமி கேள்வி
முள்ளங்கி 15
முட்டை கோஸ் 10
வெண்டைக்காய் 50/40
உஜாலா கத்திரிக்காய் 20/18
வரி கத்திரி 15/10
காராமணி 35/
பாவக்காய் 35/30
புடலங்காய் 20/18
சுரக்காய் 25/20
சேனைக்கிழங்கி 22
முருங்ககாய் .120/100
சேமகிழங்கு 30/25
காலிபிளவர் 25/20
வெள்ளரிக்காய் 20
பச்சை மிளகாய் 35/30
பட்டாணி 55/45
இஞ்சி 65/55
பூண்டு 110/80/60
அவரைக்காய் 35/30
மஞ்சள் பூசணி 10/8
வெள்ளை பூசனி.8
பீர்க்கங்காய் 35
எலுமிச்சை 30/25
நூக்கள் 20
கோவைக்காய் 25/20
கொத்தவரங்காய் 30/25
வாழைக்காய் 9/7
வாழைதண்டு,மரம் 40
வாழைப்பூ 20
பச்சைகுடமிளகாய் 60/50
வண்ண குடமிளகாய் 80
கொத்தமல்லி 5
புதினா 3
கருவேப்பிலை 40
கீரை வகைகள் 15
மாங்காய் 60/50
துவரை. 45
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Koyambedu, Koyambedu Market, Vegetables