ஹோம் /நியூஸ் /சென்னை /

''நம் கட்சிக்குள் சனாதனம்" மேடையில் படாரென பேசிய விசிக பெண் நிர்வாகி... ஷாக்கான திருமா.. மைக்கை ஆஃப் செய்த நிர்வாகி!

''நம் கட்சிக்குள் சனாதனம்" மேடையில் படாரென பேசிய விசிக பெண் நிர்வாகி... ஷாக்கான திருமா.. மைக்கை ஆஃப் செய்த நிர்வாகி!

விசிக

விசிக

நற்சோலை பேசிக்கொண்டிருந்தபோது மேடைக்கு வந்த ஆண் நிர்வாகி ஒருவர், மைக்கை ஆப் செய்து விட்டார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  மேடைக்கு மேடை சனாதான எதிர்ப்பு பேசினாலும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள்ளே சனாதானம் இருப்பதாக அக்கட்சியின் மகளிர் அணி செயலாளர் நற்சோனை பேசியுள்ளார். மேலும் அவர் பேசியபோது சொந்தக் கட்சியினராலேயே மைக் ஆஃப் செய்யப்பட்டது மேடையில் சலசலப்பை ஏற்படுத்தியது.

  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் ஒருங்கிணைப்பில் திருமாவளவன் மணி விழாவுக்கான தங்கம் வழங்கும் நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரில் உள்ள சர்.பி.டி. தியாகராய அரங்கில் நடைபெற்றது.

  இதில் அக்கட்சி தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய மகளிர் விடுதலை இயக்கத்தின் மாநில செயலாளர் நற்சோனை, மாவட்டங்களில் திருமாவளவன் பெயரை சொல்லி நன்கொடைகள் வாங்கப்படுவதாக குற்றஞ்சாட்டினார். மாவட்ட நிர்வாகிகள் பெண்களை மிக கேவலமாக திட்டுவதாகவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள்ளேயே சனாதனம் மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை இருப்பதாகவும் சாடினார்.

  பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு நடைபெறுமா? உச்சநீதிமன்றத்தில் இன்று முக்கிய விசாரணை! 

  நற்சோலை பேசிக்கொண்டிருந்தபோது மேடைக்கு வந்த ஆண் நிர்வாகி ஒருவர், மைக்கை ஆப் செய்து விட்டார். அப்போது நற்சோனைக்கு ஆதரவாக அரங்கில் அமர்ந்திருந்த மகளிர் பலர் எழுந்து நின்று குரல் கொடுத்ததால் சலசலப்பு நிலவியது.

  தொடர்ந்து பேசிய திருமாவளவன், நற்சோனை தன்னுடைய களப்பணியில் ஏற்பட்ட கசப்பை உணர்ச்சிவசப்படாமல் பேசியதாக கூறினார்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Thirumavalavan, VCK