Home /News /chennai /

பீகாரை போல் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: திருமாவளவன்

பீகாரை போல் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: திருமாவளவன்

திருமாவளவன்

திருமாவளவன்

ரஜினிகாந்த் யாரையும் சந்திக்கலாம். யாருடனும் அரசியல் பேசலாம். அதில் கருத்து எதுவும் இல்லை. ஆனால் கவர்னர் தன்னுடைய பொறுப்பை மீறி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் - திருமாவளவன்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India
    பிகாரை போல் இந்தியா முழுவதும் ஜனநாயக சக்திகள் ஒருங்கிணை வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பேசியுள்ளார். பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியதற்காக நிதிஷ்குமாருக்கு அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘ நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் எதிர்கட்சிகளின் குரல் வளையை நெறிக்க கூடியதாக ஜனநாயகத்தை நசுக்க கூடியதாக இருந்தது. 12ம் தேதி வரை கூட்ட தொடர் நடத்தாமல் 4 நாட்களுக்கு முன்னதாக நிறைவு செய்து விட்டார்கள்.

    பா.ஜ.க. அரசு ஒரு பாசிச அரசு என்பதற்கு அவையில் எதிச்சதிகாரங்கள் சான்றாக இருந்தன. 4 உறுப்பினர்களை இடைநீக்கம் செய்த போது எதிர்கட்சிகளின் தொடர் அழுத்தம் காரணமாக  திரும்ப பெற்றனர்.  மாநிலங்களவை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 18 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். அந்த வகையில் ஜனநாயகத்தை நெறிக்க கூடிய கூட்டத் தொடராக இருந்தது. எதிர்கட்சிகளின் கருத்துகளை கேட்காமல் எதிர்ப்புகளை மீறி சில மசோதாக்களை நிறைவேற்றி கொண்டனர்’ என விமர்சித்தார்.

    பிகார் அரசியல் குறித்த கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், பிகாரில் பா.ஜ.க.விற்கு ஒரு அச்சுறுத்தல் தரக்கூடிய வகையிலும் தேசிய அளவில் ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைக்க ஒரு ஆச்சாரமாக இருக்க கூடிய வகையில் நிதிஷ் குமார் எடுத்து உள்ள முடிவு வரலாற்று சிறப்பாக உள்ளது. பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகி புதிய கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கிறார். ஜனநாயகத்தை உயிர்ப்பிக்கும் கூட்டணியாக விளங்குகிறது.இந்தியா முழுவதும் இது போல் ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைக்க வழி காட்டும் நிலைப்பாடாக அமைய வேண்டும்’ என தெரிவித்தார்.

    இதையும் படிங்க: முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது – கேரள முதல்வர் கடிதத்திற்கு மு.க.ஸ்டாலின் பதில்

    தொடர்ந்து பேசிய அவர், ரஜினிகாந்த் யாரையும் சந்திக்கலாம். யாருடனும் அரசியல் பேசலாம். அதில் கருத்து எதுவும் இல்லை. ஆனால் கவர்னர் தன்னுடைய பொறுப்பை மீறி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அவருடைய அரசியல் கடமை மாநில-மத்திய அரசுகளுக்கு இணைக்க  போக்கை உருவாக்க வேண்டியது தான். ஆனால் அவர் ஆர்.எஸ்.எஸ்.காரராக முழு நேர அரசியல்வாதியாக செயல்படுகிறார். கவர்னரின் போக்குகள் மாநில அரசுக்கு மட்டுமல்ல தேசிய அளவில் ஜனநாயகத்திற்கு முரணாக சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக இருப்பது கவலை அளிப்பதாக உள்ளதாக தெரிவித்தார்.

    செய்தியாளர்: சுரேஷ்- சென்னை ஏர்போர்ட்
    Published by:Murugesh M
    First published:

    Tags: Bihar, BJP, Thol. Thirumavalavan

    அடுத்த செய்தி