ஹோம் /நியூஸ் /சென்னை /

“அதிமுக பாஜகவின் துணை அமைப்பாக மாறி இருக்கிறது” : தொல்.திருமாவளவன் விமர்சனம்!

“அதிமுக பாஜகவின் துணை அமைப்பாக மாறி இருக்கிறது” : தொல்.திருமாவளவன் விமர்சனம்!

திருமாவளவன்

திருமாவளவன்

தை திருநாளே தமிழர்களுக்கான புத்தாண்டு நாள். கருணாநிதி தை முதல் நாளை தமிழ் புத்தாண்டு என்று சட்டமாக அறிவித்தார் - தொல்.திருமாவளவன்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பாஜகவின் துணை அமைப்பாக மாறி உள்ளதாக குற்றம்சாட்டியுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பாஜக எந்த முடிவை எடுத்தாலும் கண்ணை மூடி ஆதரிப்பார்கள் என்றும் விமர்ச்சித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள்  கட்சி அலுவலகத்தில்  செய்தியாளர் சந்திப்பில் பேசிய தொல்.திருமாவளவன், “தை திருநாளே தமிழர்களுக்கான புத்தாண்டு நாள். கலைஞர் தை முதல் நாளை தமிழ் புத்தாண்டு என்று சட்டமாக அறிவித்தார். பின்பு ஜெயலலிதா சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டு என அறிவித்தார்.  எனவே தை முதல் நாளை தமிழ் புத்தாண்டு என்று முதல்வர் அறிவிக்க வேண்டும் என்றார்.

மேலும், “தமிழகம் வேறு, தமிழ்நாடு வேறு என்பதை உருவாக்குவது ஒரு குதர்க்கவாதம். மதவாத, பிற்போக்கு சக்திகளிடம் இருந்து இந்த நாட்டை மீட்க வேண்டும் என்று பேசினார்.

தொடர்ந்து பேசுகையில், “புதுக்கோட்டை சம்பவம் தொடர்பாக வருகிற 19ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரில் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. அங்கு நடைபெற்ற சம்பவம் ஒரு வெட்கக்கேடானது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது. இந்த வழக்கை தமிழக அரசு சிபிசிஐடிக்கு மாற்றி உள்ளதை விசிக வரவேற்கிறது. அந்த தொட்டியை தரை மட்டமாக மாற்ற வேண்டும். அனைவருக்கும் ஒரே தொட்டியை அரசு உருவாக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த அதிமுகவின் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பாஜகவின் துணை அமைப்பாக மாறி உள்ளது.பாஜக எந்த முடிவை எடுத்தாலும் கண்ணை மூடி ஆதரிப்பார்கள் என்று விமர்ச்சித்துள்ளார்.

First published:

Tags: Thol Thirumaavalavan, VCK