ஹோம் /நியூஸ் /சென்னை /

13-ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் : அனைத்து கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த திருமாவளவன்!

13-ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் : அனைத்து கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த திருமாவளவன்!

திருமாவளவன்

திருமாவளவன்

ஆளுநரை கண்டித்து வருகிற 13 ஆம் தேதி, ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் - திருமாவளவன்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

13ம் தேதி நடைபெறும் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தில் அனைத்து ஜனநாயக சக்திகளும் பங்கேற்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசிய பின் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்த ஆளுநர், தமிழ்நாட்டை தமிழகம் என்றே அழைக்கலாம் என பேசியிருந்தார். மேலும், நேற்று சட்டப் பேரவையில் தனது உரையில் திராவிட மாடல் ஆட்சி உள்ளிட்ட வார்த்தைகளையும் தவிர்த்திருந்தார். தமிழ்நாட்டை தமிழகம் என அழைக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என் ரவி கருத்து தெரிவித்ததை எதிர்த்து பல்வேறு அமைப்பினர், கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘"“தமிழ்நாடு என்ற வார்த்தையை புறக்கணிக்கிறார் என்றால், அவர் இங்கு ஆளுநராக இருக்க தகுதியற்றவர். ஆளுநரை கண்டித்து உடனடியாக எதிர்வினை ஆற்றிய முதல்வரின் நடவடிக்கை போற்றுதலுக்குரியது' என்றார். 

மேலும் தொடர்ந்து பேசுகையில், “திட்டமிட்டு அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தும் ஆளுநரை கண்டித்து வருகிற 13 ஆம் தேதி, ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். இண்ட்த முற்றுகைப் போராட்டத்தில் அனைத்து ஜனநாயக சக்திகளும் பங்கேற்க வேண்டும்’ என அவர் கோரிக்கை விடுத்தார்.

மேலும் “குடிநீர் தொட்டியில் மலம் கலந்தது தொடர்பாக, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் உறுதி அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

First published:

Tags: Thol. Thirumavalavan, VCK