ஹோம் /நியூஸ் /சென்னை /

‘மனு தர்மம் எங்கே உள்ளது என கேட்பவர்களின் கவனத்திற்காக...’ திருமாவளவன் பகிர்ந்த புகைப்படம்

‘மனு தர்மம் எங்கே உள்ளது என கேட்பவர்களின் கவனத்திற்காக...’ திருமாவளவன் பகிர்ந்த புகைப்படம்

திருமாவளவன்

திருமாவளவன்

மேலும் 6ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பாடப்புத்தகத்தில் வர்ணாசிரம தர்மம் குறித்த விளக்கப்படம் இருப்பதை பகிர்ந்த அவர், பள்ளி மாணவர்களுக்கு பாஜக அரசு இதை தான் கற்று கொடுக்கிறது என குறிப்பிட்டிருந்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  மனு தர்மம் எங்கே உள்ளது என கேட்பவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக, 6ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ பாடபுத்தகத்தில் உள்ள வர்ணாசிரமம் குறித்த விளக்கப்படத்தை பகிர்ந்துள்ளார் விசிக தலைவர் திருமாவளவன்.

  சமீபத்தில் மனு தர்மம் குறித்து ஆ.ராசா பேசியது சர்ச்சைக்குள்ளானது. மனு சாஸ்திரத்தில், சூத்திரர்கள் என்றால் வேசியின் மகன் என குறிப்பிடப்பட்டுள்ளது என அவர் பேசியிருந்தார். இந்நிலையில் இதற்கு பதிலளித்த பாஜகவினர், மனு தர்மம் நடைமுறையில் இல்லை ஆனால் ஆ.ராசா தேவையில்லாமல் அதை பற்றி பேசி ஹிந்துக்கள் மனதை புண்படுத்திவிட்டார் என கூறினர்.

  மேலும் இப்போதெல்லாம் யாரும் ஜாதி பார்ப்பது இல்லை, வர்ணாசிரம தர்மம் பயன்பாட்டில் இல்லை என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  இதையும் வாசிக்க: ‘தொடர் பெட்ரோல் வெடிகுண்டு வீச்சில் பாஜகவினர் மீது சந்தேகம் உள்ளது’ – திருமாவளவன்

  இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். வர்ணாசிரம தர்மம் அல்லது மனுதர்மம் எங்கே என கேள்வி எழுப்புவோரின் கவனத்திற்காக என குறிப்பிட்டிருந்தார். மேலும் 6ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பாடப்புத்தகத்தில் வர்ணாசிரம தர்மம் குறித்த விளக்கப்படம் இருப்பதை பகிர்ந்த அவர், பள்ளி மாணவர்களுக்கு பாஜக அரசு இதை தான் கற்று கொடுக்கிறது என குறிப்பிட்டிருந்தார்.

  மேலும் இந்துக்கள் நான்கு வகை மட்டுமே. பட்டியலின மக்கள் இந்த நான்கு வகையில் சேராதவர்கள் எனவும் தெரிவித்தார்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: CBSE School lesson, Manusmriti, Thirumavalavan