முகப்பு /செய்தி /சென்னை / “இந்த ஒரு செயின் மட்டும் 122 பவுன்..”- வரிச்சியூர் செல்வம் அணிந்திருக்கும் மொத்த நகையின் மதிப்பு இவ்வளவா?

“இந்த ஒரு செயின் மட்டும் 122 பவுன்..”- வரிச்சியூர் செல்வம் அணிந்திருக்கும் மொத்த நகையின் மதிப்பு இவ்வளவா?

வரிச்சூர் செல்வம்

வரிச்சூர் செல்வம்

கலைஞருக்கு கண்ணாடியும், எம்.ஜி.யாருக்கு தொப்பியும் அடையாளமாக இருப்பது போல எனக்கு இந்த நகைகள் - வரிச்சூர் செல்வம்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சமீபத்தில் அதிக நகைகள் அணிந்து சமூகவலைதளங்களில் வைரலான வரிச்சியூர் செல்வம் என்பவர் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அதில் தான் அணிந்திருக்கும் நகை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

மதுரையைச் சேர்ந்த வரிச்சியூர் செல்வம், தனது காது முதல் கால் வரை அதிகமான ஆபரணங்கள் அணிந்து எப்போதும் நடமாடும் நகைக்கடை போல வலம் வருபவர். இவர் சமீபத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், தன் தந்தையை ஒருவர் கொலை செய்ததற்கு பதிலாக தானும் ஒருவரை கொலை செய்தாகவும் அதற்காக 10 ஆண்டுகள் ஜெயிலில் இருந்தாகவும் தெரிவித்தார். மேலும் தான் ஒரு ரவுடியில்லை என விளக்கமளித்தார்.

அவர் அணிந்திருக்கும் நகை குறித்து கேள்வி எழுப்பிய போது,“கலைஞருக்கு கண்ணாடியும், எம்.ஜி.யாருக்கு தொப்பியும் அடையாளமாக இருப்பதுபோல எனக்கு இந்த நகைகள் அடையாளமாக இருக்க வேண்டும் என நினைத்துதான் இப்படி சுற்றிக் கொண்டிருக்கிறேன். நான் அணிந்துள்ள நகைகள் அனைத்துக்கும் ஆண்டுதோறும் சரியாக வருமான வரி செலுத்தி உள்ளேன்” என கூறினார்.

இதனை தொடர்ந்து நியூஸ்18 தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், “ நீங்கள் என்னை பேட்டி எடுக்கிறீர்களே அதற்காக தான் நகை அணிந்துள்ளேன். இந்தியாவிலே யாரும் அணிந்திருக்காத நகையை போட வேண்டும் என எண்ணி இந்த செயினை அணிந்துள்ளேன். இந்த ஒரு செயின் மட்டும் 122 பவுன், மொத்தம் 210 பவுன் நகை அணிந்துள்ளளேன். எனக்கு மிருகங்கள் மிகவும் பிடிக்கும் என்பதால் மிருகங்கள் பொறித்த நகைகளை அணிந்துள்ளேன்” எனவும் தெரிவித்தார்.

First published:

Tags: Gold, Trending News, Viral News