ஹோம் /நியூஸ் /சென்னை /

செம ஸ்பீடு.. சென்னைக்கு வந்தது அதிவேக வந்தே பாரத் ரயில்.. செல்ஃபி எடுத்த மக்கள்!

செம ஸ்பீடு.. சென்னைக்கு வந்தது அதிவேக வந்தே பாரத் ரயில்.. செல்ஃபி எடுத்த மக்கள்!

வந்தே பாரத் ரயில்

வந்தே பாரத் ரயில்

அதிகபட்சம் 130 கிலோமீட்டர் வேகத்திலும் சராசரியாக 73 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில், 504 கிலோமீட்டரை 6 மணி நேரம் 40 நிமிடத்தில் கடக்கிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  இன்று காலை சென்னை வந்தடைந்த வந்தே பாரத் ரயில் சென்னையில் இருந்து மைசூருக்கு ஒத்திகை பயணத்தை மேற்கொள்கிறது.

  இந்திய ரயில் தடத்தில் அதிவேக பயணத்தை மேற்கொள்ளும் வந்தே பாரத் தன்னுடைய 5வது பயணத்தை சென்னையில் இருந்து மைசூர் வழித்தடத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

  இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 11ஆம் இந்தத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். ஏற்கனவே புது டெல்லி, வாரணாசி, மும்பை, அகமதாபாத், குஜராத், இமாசலப் பிரதேசம் ஆகிய 4 வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது.

  இந்த நிலையில் அடுத்த கட்ட பயணமாக 5வது வந்தே பாரத் ரயில், சென்னையில் இருந்து மைசூருக்கும் மைசூரிலிருந்து சென்னைக்கும் இயக்க, சோதனை ஓட்டங்கள் நிறைவு பெற்றுள்ளது. இதன் இறுதி கட்ட ஒத்திகை பயணம் இன்று காலை தொடங்கியது. நின்றுகொண்டிருந்த ரயிலுக்கு அருகே பொதுமக்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

  சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 5.50 மணிக்கு புறப்பட்ட வந்தே பாரத் ரயில், அரக்கோணம் வரை 130 கிலோமீட்டர் வேகம் பயணம் மேற்கொள்கிறது.

  இதையும் வாசிக்க: காற்றழுத்த தாழ்வு பகுதிக்கு வாய்ப்பு.. தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழை பெய்யும்? வானிலை எச்சரிக்கை! (news18.com)

  பின்னர் காலை 8:50 மணிக்கு ஜோலார்பேட்டைக்கும் 10:25 மணிக்கு பெங்களூர் ரயில் நிலையத்திற்கும் சென்றடையும். அங்கு 5 நிமிடங்கள் நின்று பிறகு மீண்டும் 10:30க்கு புறப்பட்டு 12:30 மணிக்கு மைசூரை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  பிறகு மீண்டும் மைசூரிலிருந்து சென்னைக்கு புறப்படும் வந்தே பாரத் மைசூரில் இருந்து 1 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டைக்கு மாலை 4:45 மணிக்கு வந்தடைகிறது. பின்னர் இரவு 7:45 மணிக்கு சென்னை வந்தடைகிறது.

  அதாவது அதிகபட்சம் 130 கிலோமீட்டர் வேகத்திலும் சராசரியாக 73 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில், 504 கிலோமீட்டரை 6 மணி நேரம் 40 நிமிடத்தில் கடக்கிறது.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Electric Train, Indian Railways, Southern railway