ஹோம் /நியூஸ் /சென்னை /

வந்தே பாரத் ரயில் குறைவான வேகத்தில் இயக்கம் : பயணிகளிடையே குறைந்த ஆர்வம்!

வந்தே பாரத் ரயில் குறைவான வேகத்தில் இயக்கம் : பயணிகளிடையே குறைந்த ஆர்வம்!

வந்தே பாரத்

வந்தே பாரத்

சென்னை - மைசூரு இடையே தொடங்கப்பட்ட வந்தே பாரத் ரயில், குறைவான வேகத்தில் இயக்கப்படுவதால் பயணிகளிடையே ஆர்வம் குறைந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நாட்டின் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில் சேவை முதன் முதலாக டெல்லி - வாரணாசி வழித்தடத்தில் தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, டெல்லி - காஷ்மீர் வைஷ்ணவி தேவி கோயில் வழித்தடத்திலும், மும்பை - காந்தி நகர் வழித்தடத்திலும் ரயில் சேவை தொடங்கப்பட்ட நிலையில், 5வது வந்தேபாரத் ரயில் சேவையை சென்னை - மைசூரு வழித்தடத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

சென்னை - மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்ட ஒரு மாதத்திலேயே பயணிகளிடையே போதிய வரவேற்பை பெற தவறிவிட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக, வந்தே பாரத் ரயில்கள் 150 கிலோ மீட்டர் வேகம் வரை இயக்க கூடிய திறன் பெற்றிருந்தாலும், வழித்தடங்களில் உள்ள சிக்னல் மற்றும் பாதை இடையூறுகள் காரணமாக 75 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்கப்படும் நிலை உள்ளதால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: நாக்பூர் மெட்ரோவில் டிக்கெட் எடுத்து பயணித்த பிரதமர் மோடி

 

சென்னையில் இருந்து மைசூரு செல்லும் சதாப்தி விரைவு ரயிலுடன் ஒப்பிடுகையில், வெறும் 20 நிமிடங்களே வித்தியாசம் என கூறப்படும் நிலையில், அதிகப்படியான கட்டணம் வசூலிப்பதால், பயணிகளிடையே ஆர்வம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, ஜோலார்பேட்டையில் இருந்து அதிகப்படியான லெவல் கிராசிங் மற்றும் ரயில்வே மேம்பாலங்கள் இருப்பது வேகம் குறைய முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதனால், அரக்கோணம் மற்றும் ஜோலார்பேட்டை இடையே தண்டவாளத்தை மேம்படுத்தும் பணி தொடங்கி இருப்பதாகவும், 2023 மார்ச் மாதத்திற்குள் பணிகளை நிறைவு செய்து வந்தே பாரத் ரயிலின் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

First published:

Tags: Vande Bharat