போகி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இன்று காலையில் பல்வேறு இடங்களில் பழைய பொருட்களை எரித்துக் கொண்டாடப்பட்டது. அதன் விளைவாக சென்னையில் காற்று தரக் குறியீடு 14 மண்டலங்களில் மிதமான அளவிலும், ஒரு மண்டலத்தில் மோசமான அளவிலும் இருந்ததாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.
பொங்கல் திருநாள் முன்னிட்டு போகி பண்டிகை இன்று கோலாகலமாக (14.01.2023) இன்று கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகிப் பண்டிகையைக் கொண்டாடி வந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது நவீனக் காலத்திற்கு ஏற்ற சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படத்தாத புகை இல்லாத போகியைக் கொண்ட மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், ரப்பர் டயர், டியூப் போன்ற பொருட்களை எரிக்க வேண்டாம் என்று மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்ட தலைமையிடங்களிலும் 11.01.2023 அன்று முதல் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.
சென்னை பெருநகர மாநகரத்தின் சுற்றுச்சூழல் காற்றும் தரத்தினை கண்காணிப்பு செய்யும் பொருட்டு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய ஆய்வகத்தின் மூலம் போகிப்பண்டிகையில் முந்தைய நாள் (11.01.2023-12.01.2023) மற்றும் போகி பண்டிகை(13.01.2023-14.01.2023) அன்று 15 இடங்களில் 24 மணிநேரமும் கூற்றுத்தரத்தினை கண்காணிக்கக் காற்றும் மாதிரி சேகரிப்பு செய்து ஆய்வு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் இந்தியாவில் கற்றுத்தரக் குறியீடு முறைப்படி 13.01.2023 காலை 8 மணி முதல் 14.01.2023 காலை 8 மணி வரை சுற்றுச்சூழல் காற்று தரத்தினை அளவீடு செய்து ஆய்வு நடத்தியதில், காற்றில் கலந்துள்ள கந்தக-டை-ஆக்ஸைடு மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடு ஆகிய வாயுக்களின் அளவு அனைத்து 15 மண்டலங்களிலும் அனுமதிக்கப்பட்ட தர அளவான 80 மைக்ரோகிராம்/கனமீட்டருக்கு உட்பட்டு இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : ஐஸ்கிரீம் வாகன முகவர்கள் ஆக விருப்பமா? - ஆவின் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு
அதன் அடிப்படையில் குறைந்த பட்சமாக அண்ணாநகரில் 135 ஆகவும், அதிகபட்சமாக வளசரவாக்கத்தில் அதிகப்படியான 277 ஆகவும் பதிவாகியுள்ளது என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளனர். சென்னை பெருநகர மாநகராட்சியின் 14 மண்டலங்களில் காற்றுத் தர குறியீடு மிதமான அளவுகளிலும், 1 மண்டலத்தில் (வளசரவாக்கம்) மோசமான அளவாக இருந்தது என கண்டறியப்பட்டது.
சென்னை விமான நிலையத்திற்கு அருகில் உள்ள இடங்கள் பொருத்தவரை மக்கள் பெருமளவுக் குப்பைகளையோ அல்லது பிளாஸ்டிக் கழிவுகளையோ எரிக்கவில்லை என்பதால் விமான போக்குவரத்தில் எந்த தடையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.