ஹோம் /நியூஸ் /சென்னை /

உதயநிதி வாரிசா? துணிவா? - கவிஞர் வைரமுத்து சொன்ன ’நச்’ பஞ்ச்!

உதயநிதி வாரிசா? துணிவா? - கவிஞர் வைரமுத்து சொன்ன ’நச்’ பஞ்ச்!

வைரமுத்து, உதயநிதி

வைரமுத்து, உதயநிதி

சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு விழா சிறப்புக் கவியரங்கம் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னையில் நடைபெற்ற பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில், முதலமைச்சர் ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு விழா சிறப்புக் கவியரங்கம் நடைபெற்றது. "இனமானம் காத்த தமிழ்வானம்" எனும் தலைப்பில் வைரமுத்து தலைமையில் நடைபெற்ற கவியரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அண்ணாமலை வாட்ச் ரூ. 5 லட்சம்.. ரசீதை வெளியிட தயாரா? சவால் விடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி! 

விழாவில் அன்பழகன் குறித்து பேசிய வைரமுத்து, உதயநிதி ஸ்டாலின் குறித்தும் கவிதைகளால் புகழ்ந்து பேசினார். அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி, வாரிசா ? துணிவா? என எல்லோருக்கும் கேள்வி இருப்பதாகவும்; ஆனால் அவர் துணிவு மிக்க வாரிசு என்றும் வைரமுத்து கவிதையால் புகழ்ந்து பேசியுள்ளார்.

First published:

Tags: CM MK Stalin, Udhayanidhi Stalin, Vairamuthu