ஹோம் /நியூஸ் /சென்னை /

தமிழ் எங்கள் அதிகாரம், இந்தி சர்வாதிகாரம்.. வைரமுத்து ஆவேசம்..!

தமிழ் எங்கள் அதிகாரம், இந்தி சர்வாதிகாரம்.. வைரமுத்து ஆவேசம்..!

வைரமுத்து

வைரமுத்து

தமிழ் மொழியை மாத்திரத்தால் அழிக்க முடியாது, சட்டத்தாலும் அழிக்க முடியாது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai | Chennai [Madras] | Tamil Nadu

  மத்திய அரசின் இந்தி திணிப்பைக் கண்டித்து தமிழறிஞர்கள், தமிழ்ப் படைப்பாளர்கள் கவிஞர் வைரமுத்து தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

  சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்று வரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் இயக்குநர் கவுதமன், தமிழ் இலக்கியவாதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதில், மத்திய அரசுக்கு எதிராகவும், இந்தி திணிப்புக்கு எதிராகவும் பல்வேறு கண்டன கோஷங்கள் முழங்கப்பட்டது.

  தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் பேசிய கவிஞர் வைரமுத்து ஒரு வரலாற்று நிகழ்வுக்காக ஒன்றிணைந்திருக்கிறோம். வரலாற்று நெருக்கடி தமிழுக்கு நேர்ந்துள்ளது. இது தமிழுக்கு புதிதல்ல.85 ஆண்டுகளாக நிகழ்கிறது. 85 ஆண்டுகளாக ஒரு மொழியை ஓர் அரசு திணிக்க பார்க்கிறது.அதை தமிழ்நாடு எதிர்த்து வருகிறது என ஆவேசமாக தெரிவித்தார்.

  இதையும் படிங்க | இலங்கை குண்டுவெடிப்பு குற்றவாளியை சந்தித்தாரா ஜமேஷா முபின்?

  மேலும், இப்போது தமிழை சட்டத்தால் அழிக்க பார்க்கிறார்கள். தமிழ் மொழி காகிதம் அல்ல. பாரதியார் போற்றிய மொழி தமிழ். கனியை பிழிந்த சாறு என பாவேந்தரால் பாடப்பட்ட மொழி. இந்த மொழியை மந்திரத்தால் அழிக்க முடியாது, சட்டத்தாலும் அழிக்க முடியாது என உறுதியாக தெரிவித்தார்.முன்பு இந்தி திணிப்பது கொசு கடிப்பது போல இருந்தது. ஆனால் தற்போது இந்தி திணிப்பு ஆட்டுக்கு பூச்சூட்டி மஞ்சள் தெளித்து கத்தி தயாராக வைப்பது போல் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

  1985 ஐ விட இப்போது 2022 ல் எதிர்ப்பு அதிகமாக இருக்க வேண்டும். இந்தி தெரியாதவர்கள் மத்திய அரசின் பணிகளில் இனி இருக்க முடியாதா. தமிழ் எங்களுக்கு வாழ்வு ஆங்கிலம் எங்களுக்கு வசதி. இந்தி தெரிந்தால் ஊமையாக தான் இருக்க வேண்டும். இந்தி வந்தால் ஆங்கிலத்தை மெல்ல மெல்ல அகற்ற பார்க்கிறார்கள் என குற்றஞ்சாட்டினார்.

  மேலும், ஆங்கிலம் அந்நிய தேசத்து மொழி, ஆனால் அறியாத மொழி அல்ல; இந்தி உள்நாட்டு மொழி, ஆனால் அறியாத மொழி; இந்தி இந்திய மொழி தானே, கற்றுக் கொள்ளலாம் என சிலர் நினைக்கலாம். ஆனால், இந்தியை உள்ளே நுழைய விட்டால்- முந்திரி பருப்பு மூட்டையில் சில வண்டுகள் விழுந்தால் சில மாதங்கள் கழித்து முந்திரி பருப்பு அல்ல பருக்கைகள் மட்டும் தான் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

  தொடர்ந்து பேசிய அவர், எங்களுக்கு இந்தி மீது எந்த வெறுப்பும் இல்லை, எப்படி அண்டை மாநில மொழிகளை சகோதரர்களை மதிக்கிறோமோ அதே போல இந்தியையும் மதிக்கிறோம். நீங்கள் எங்களுக்கு பக்கத்து வீடு. உங்கள் வீட்டில் இந்தி மரம் வளர்க்கிறீர்கள். ஆனால் அதை வளர்க்கிறோம் என எங்கள் வீட்டு ஜன்னல் கண்ணாடிகள் உடைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் என வலியுறுத்தினார். தமிழ் எங்கள் அதிகாரம். இந்தி திணிப்பு சர்வாதிகாரம் என வைரமுத்து கண்டன கோஷங்களை முழங்கினார்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Poet vairamuththu, Protest, Vairamuthu