Home /News /chennai /

வைகோ ரீல் ஹீரோ அல்ல ரியல் ஹீரோ! ’மாமனிதன் வைகோ’ திரைப்பட வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!

வைகோ ரீல் ஹீரோ அல்ல ரியல் ஹீரோ! ’மாமனிதன் வைகோ’ திரைப்பட வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!

முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின்

உரை வீச்சால் அரசியலின் ஆழத்தையும் - நெடும்பயணங்களால் தமிழ்நாட்டையும் அளந்தவர் எனவும் 'திராவிடப் போர்வாள்' எனச் செருக்களத்தில் கொள்கைப் பகைவர் கூட்டத்தை எதிர்ப்பவர் எனவும் புகழாரம் சூடினார்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    திமுக பொதுச்செயலாளர் வைகோ ஒரு எழுச்சிமிக்க, உணர்ச்சி மிக்க போராளி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

    மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் அரசியல் பயணத்தை விவரிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட ‘மாமனிதன் வைகோ’ என்ற ஆவணப்படத்தை சத்தியம் திரையரங்கில் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.

    அதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், திரைப்படத்தில் வரும் ஹீரோக்கள் சித்தரிக்கப்பட்டவர்கள் என்றும் வைகோ சித்தரிக்கப்படாத ரியல் ஹீரோ என்றும் பெருமிதம் தெரிவித்தார். உயரத்தில் மட்டும் உயர்ந்தவர் அல்ல. லட்சியம், தியாகத்தில் உயர்ந்தவர் தான் வைகோ என்றும் குறிப்பிட்டார்.



    இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட முதலமைச்சர்,

    உரை வீச்சால் அரசியலின் ஆழத்தையும் - நெடும்பயணங்களால் தமிழ்நாட்டையும் அளந்தவர் எனவும் 'திராவிடப் போர்வாள்' எனச் செருக்களத்தில் கொள்கைப் பகைவர் கூட்டத்தை எதிர்ப்பவர் எனவும் புகழாரம் சூடினார்.

    இதையும் வாசிக்க: முதலமைச்சர் எழுதிய ‘திராவிட மாடல்’ புத்தகம் - செப்டம்பர் 15ஆம் தேதி முப்பெரும் விழாவில் வெளியீடு!

    மேலும் வைகோ அவர்களது வாழ்க்கைப் பயணத்தைத் திரையில் கண்டு மகிழ்ந்தேன் எனவும் வாழ்க அவரது தொண்டு, வெல்க திராவிடம் என தெரிவித்தார்.
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: CM MK Stalin, MDMK, Vaiko

    அடுத்த செய்தி