முகப்பு /செய்தி /சென்னை / நிஜத்தில் ஒரு அப்துல் மாலிக்... ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்யும் காலித் அகமது!

நிஜத்தில் ஒரு அப்துல் மாலிக்... ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்யும் காலித் அகமது!

உறவுகள் டிரஸ்ட் - காலித் அகமது

உறவுகள் டிரஸ்ட் - காலித் அகமது

தினமும் சராசரியாக 10 உடல்களை அடக்கம் செய்வோம். அதிகபட்சமாக ஒரே நாளில் 31 உடல்களை அடக்கம் செய்திருக்கிறோம்.

  • News18 Tamil
  • 4-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பிறப்பிலிருந்து இறப்பு வரை என மனிதனின் வாழ்க்கை வரையறுக்கப்படுகிறது. இறந்ததற்குப் பிறகு அழுது தீர்த்து, இறுதி மரியாதையுடன் உடலை அடக்கம் செய்ய பெரும்பாலானோருக்கு தங்களின் குடும்பத்தினர் இருக்கிறார்கள். ஆனால் ஆதரவற்றோர்களுக்கும், யாசகர்களுக்கும், சாலையோரவாசிகளுக்கும் யார் இதை செய்வார்கள்? என்ற கேள்வி வெகுநாட்களாகவே மண்டையில் ஓடிக் கொண்டிருந்தது.

சமீபத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான அயோத்தி படத்தைப் பார்த்த பிறகு, அந்த கேள்வியின் தீவிரம் அதிகமானது. மொழி தெரியாத ஊரில் இறந்துப் போன பெண்ணின் உடலை அவளது குடும்பத்தினருடன் அவர்களது சொந்த ஊரான அயோத்திக்கு அனுப்பி வைக்க, ராமேஸ்வரத்தை சேர்ந்த அப்துல் மாலிக் (சசிகுமார்) எடுத்துக் கொள்ளும் முயற்சிகளும், மெனக்கெடுதல்களும் அதிக பாராட்டுக்குரியவை. பல்ராம் குடும்பத்துக்கு உதவி செய்ய வந்த அப்துல் மாலிக் போல், நிஜத்தில் யாராவது இருக்கிறார்களா என்ற தேடலுக்கு பதிலாய் நமக்குக் கிடைத்தவர் தான் காலித் அகமது.

யாரிவர் என்கிறீர்களா? அடையாளம் தெரியாத இறந்த உடல்கள், ஆதரவற்றோர் உடல்கள், வெளிமாநிலங்களில் இருந்து வந்து மரணித்தவர்களின் உடல்களை தினமும் அடக்கம் செய்துக் கொண்டிருக்கிறார். இதுவரை 7000-க்கும் அதிகமான உடல்களை அடக்கம் செய்த காலித்துடன் பேசினோம்.

Uravugal Trust founder Khaalid Ahamed who is burying unidentified and homeless dead bodies, uravugal trust, uravugal trust chennai, uravugal trust khalid, uravugal trust khalid ahmed, uravugal trust khalid ahmed chennai, unidentified dead body, corona death, covid death, covid 19 death, உறவுகள் அறக்கட்டளை, உறவுகள் அறக்கட்டளை காலித் அகமது, உறவுகள் டிரஸ்ட் காலித் அகமது, உறவுகள் அறக்கட்டளை சென்னை, உறவுகள் டிரஸ்ட் சென்னை, காலித் அகமது உறவுகள் டிரஸ்ட், அடையாளம் தெரியாத உடல்கள், ஆதரவற்ற உடல்கள்
அயோத்தி படத்தில் சசிகுமார்

உங்களைப் பற்றி?

எனக்கு சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பக்கத்தில் அதிராம்பட்டினம். 12-ம் வகுப்பு முடித்துவிட்டு டிப்ளமோ இன்ஜினியரிங், பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் என சென்னையில் தான் கல்லூரி படிப்பு எல்லாமே. 2013-ல் டிப்ளமோ படிக்கும்போதே, தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். ஆதரவற்றோருக்கு உணவு, உடை வழங்குவது என செய்துக் கொண்டிருந்தோம். அப்போது அவர்களுடன் பேச நிறைய வாய்ப்பு கிடைக்கும். அந்த சமயத்தில் ஒரு தாத்தா, ’எங்கக் கிட்ட எல்லாம் பேச யாருமில்லப்பா, அதான் நாங்க பைத்தியம் மாதிரி இருக்கோம்’ என்றார்.

சரி சொல்லுங்க தாத்தா என பேச்சு கொடுத்தபோது, அவர் யோசிக்க வைக்கும் விஷயம் ஒன்றை கூறினார். ”சாப்பாடு குடுக்குறாங்க, ட்ரெஸ் குடுக்குறாங்க. எதாச்சும் பண்டிகை வந்தா எங்களை குளிப்பாட்டி அதை வீடியோ எடுத்து போடுறாங்க. ஆனா எங்க பிள்ளைங்க எல்லாம் ஏற்கனவே எங்களை கைவிட்டுட்டாங்க, அப்படி இருக்கையில நாங்க செத்ததுக்கு அப்புறம் என்ன நடக்கும்ன்னு தெரியலை. 2 மாசமா என் பக்கத்துல ஒருத்தன் படுத்து கிடந்தான். முந்தா நேத்து அவன் செத்துப் போனதும், வந்து அள்ளிப் போட்டுட்டு போய்ட்டாங்க. ஆனா அதுக்கப்புறம் என்னாச்சுன்னு தெரியலை. அவன நெனச்சு ஃபீல் பண்ண நான் இருக்கேன். ஆனா எனக்காக யாரும் இல்லை. நான் செத்தது கூட தெரியாம கடந்து போய்ட்டா, நாத்தம் புடிச்சு தான கிடப்பேன்” என அவர் சொன்னது தான் என்னை யோசிக்க வைத்தது. அப்படித்தான் உறவுகள் டிரஸ்ட் ஆரம்பமானது.

Uravugal Trust founder Khaalid Ahamed who is burying unidentified and homeless dead bodies, uravugal trust, uravugal trust chennai, uravugal trust khalid, uravugal trust khalid ahmed, uravugal trust khalid ahmed chennai, unidentified dead body, corona death, covid death, covid 19 death, உறவுகள் அறக்கட்டளை, உறவுகள் அறக்கட்டளை காலித் அகமது, உறவுகள் டிரஸ்ட் காலித் அகமது, உறவுகள் அறக்கட்டளை சென்னை, உறவுகள் டிரஸ்ட் சென்னை, காலித் அகமது உறவுகள் டிரஸ்ட், அடையாளம் தெரியாத உடல்கள், ஆதரவற்ற உடல்கள்
உறவுகள் டிரஸ்ட் காலித் அகமது

2017, ஜூலை 27-ம் தேதி எனது தொண்டு நிறுவனத்தை ஆரம்பிக்கும் போது, வெறும் உடல்களை அடக்கம் செய்வதோடு மட்டுமல்லாமல், உறவுகளின் முக்கியத்துவத்தை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என முடிவெடுத்து அதை நோக்கி நகர்ந்தேன். உறவுகள் டிரஸ்டின் லோகோ கூட கால்களை சுற்றி அனைத்து சமூக - மத மக்களும் இருக்கும்படி வடிவமைத்தேன்.

உறவுகள் டிரஸ்ட்டின் நோக்கம்?

ஆதரவற்ற நிலையில் மரணிப்பவர்களின் உடல்கள், பேரிடர் கால மரணங்கள், வெளியூர் - வெளிமாநிலங்களிலிருந்து வந்து மரணிப்பவர்கள், வசதி வாய்ப்பில்லாதவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து அந்த உடலை அடக்கம் செய்வது உள்ளிட்டவற்றை அடிப்படையாக வைத்து தான் உறவுகள் டிரஸ்ட் உதயமானது. இதை நான் செய்யும் போது எனக்கு 22 வயது தான்.

மேற்குறிப்பிட்ட வகையிலான உடல்களை அடக்கம் செய்வதைத் தாண்டி, இந்த சமூகத்தில் இப்படியான அவலம் இருக்கிறது என்பதை சக மனிதர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதும் எனது எண்ணமாக இருந்தது. அதனால் முதலில் இதை இளைஞர்களிடத்தில் கொண்டு செல்ல நினைத்தேன். இப்போது உறவுகள் டிரஸ்ட்டில் இருப்பவர்களில் 90% திருமணமாகாத இளைஞர்கள் தான்.

Uravugal Trust founder Khaalid Ahamed who is burying unidentified and homeless dead bodies, uravugal trust, uravugal trust chennai, uravugal trust khalid, uravugal trust khalid ahmed, uravugal trust khalid ahmed chennai, unidentified dead body, corona death, covid death, covid 19 death, உறவுகள் அறக்கட்டளை, உறவுகள் அறக்கட்டளை காலித் அகமது, உறவுகள் டிரஸ்ட் காலித் அகமது, உறவுகள் அறக்கட்டளை சென்னை, உறவுகள் டிரஸ்ட் சென்னை, காலித் அகமது உறவுகள் டிரஸ்ட், அடையாளம் தெரியாத உடல்கள், ஆதரவற்ற உடல்கள்
உறவுகள் டிரஸ்ட்

நிறைய கல்லூரிகளில் வாழ்க்கையின் முக்கியத்துவம் குறித்து பேசி வருகிறோம். அதிலும் குறிப்பாக பெற்றோருக்கு பெண் பிள்ளைகள் இறுதி சடங்கு செய்யலாம் என்பதில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். ஆண் குழந்தை என்றால் தான், பெற்றோருக்கு சடங்கு செய்ய வேண்டும், பெண் குழந்தைகளாக இருந்தால் அவர்களை அனுமதிக்காமல் உறவுமுறையில் வேறொரு ஆணை சடங்கு செய்ய வைப்பது மிகுந்த மூடத்தனம். தான் பெற்ற பெண்ணைக் காட்டிலும் யாரோ ஒருவன் மகன் முறையில் செய்யும் சடங்கை எந்த பெற்றோராவது ஏற்றுக் கொள்வார்களா? இதையெல்லாம் எடுத்து சொல்லி புரிய வைக்கிறோம். இதுவரை 2 லட்சம் பெண் குழந்தைகளிடம் இது குறித்த புரிதலை ஏற்படுத்தியிருக்கிறோம். இப்போது எங்களுடன் 500-க்கும் அதிகமான தன்னார்வலர்கள் பணியாற்றுகிறார்கள். அதில் 250-க்கும் மேற்பட்டோர் பெண்கள்!

இதுவரை நாங்கள் 7000-க்கும் அதிகமான உடல்களை அடக்கம் செய்திருக்கிறோம். அடையாளம் தெரியாதவர்கள், ஆதரவற்றோர்கள், அகால மரணங்கள், வெளியூரிலிருந்து வந்தவர்கள் என பலவகையான உடல்களை அடக்கம் செய்திருக்கிறோம். அதோடு கடலில் ஒதுங்குவது, வீட்டிலேயே இறந்து கிடப்பது உள்ளிட்ட அழுகிய உடல்களையும் மீட்டு மார்ச்சுவரியில் வைப்பதற்கும் தேவையானவற்றை செய்கிறோம். மேலும் உறவுகள் டிரஸ்ட் பொதுமக்களின் நன்கொடை மூலம் தான் செயல்படுகிறது.

ஏழ்மையில் இறப்பவர்களுக்கும் உங்கள் உதவி கிடைக்குமா?

Uravugal Trust founder Khaalid Ahamed who is burying unidentified and homeless dead bodies, uravugal trust, uravugal trust chennai, uravugal trust khalid, uravugal trust khalid ahmed, uravugal trust khalid ahmed chennai, unidentified dead body, corona death, covid death, covid 19 death, உறவுகள் அறக்கட்டளை, உறவுகள் அறக்கட்டளை காலித் அகமது, உறவுகள் டிரஸ்ட் காலித் அகமது, உறவுகள் அறக்கட்டளை சென்னை, உறவுகள் டிரஸ்ட் சென்னை, காலித் அகமது உறவுகள் டிரஸ்ட், அடையாளம் தெரியாத உடல்கள், ஆதரவற்ற உடல்கள்
உறவுகள் டிரஸ்ட்

பணம் இருக்கும் ஒருவர் இறப்பதற்கும், ஏழை ஒருவர் இறப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. பணம் இருப்பவர் என்றால் எத்தனை மெனக்கெட்டாலும், அவரது உறவினர்கள் இறுதி சடங்கிற்கு வந்து சேர்வார்கள். இதுவே ஏழை ஒருவர் இறந்தால் அருகில் இருப்பவர்கள் கூட கண்டுக்கொள்ள மாட்டார்கள். அதனால் உண்மையாகவே இறுதி சடங்கு செய்ய முடியாத அளவுக்கு யாராவது இறந்தால், மருத்துவமனை தரப்பில் இருந்து எங்களிடம் தெரிவிப்பார்கள். அவர்களின் உடலை வீட்டுக்கு கொண்டு செல்லாமல், நேரடியாக மயானம் கொண்டு சென்று அடக்கம் செய்வோம். அடையாளம் தெரியாதவர்கள் இறந்தால் போலீஸ் தரப்பில் எங்களை அணுகுவார்கள்.

கொரோனோ பேரிடர் காலத்தை எப்படி சமாளித்தீர்கள்?

கொரோனோ இறப்பை பொருத்தவரை, முதல் உடலை அடக்கம் செய்யும் போது மட்டும் தான் சின்ன பயம் இருந்தது. ஆனால் அந்த சமயம் எங்களின் தேவை அதிகம் என்பதால், தைரியமாக உடல்களை அடக்கம் செய்தோம். அந்த சமயம் 2 குழுவாக பிரிந்து செயல்பட்டோம். ஒரு குழு 20 நாள் வேலை பார்க்கும், இன்னொரு குழு அடுத்த 20 நாள் வேலை பார்க்கும்.

எங்கெல்லாம் உங்கள் டிரஸ்ட் வேலை செய்கிறது?

இப்போதைக்கு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களிலும் உறவுகள் டிரஸ்ட் செயல்படுகிறது.

உங்களுடைய ஒருநாள் எப்படியிருக்கும்?

Uravugal Trust founder Khaalid Ahamed who is burying unidentified and homeless dead bodies, uravugal trust, uravugal trust chennai, uravugal trust khalid, uravugal trust khalid ahmed, uravugal trust khalid ahmed chennai, unidentified dead body, corona death, covid death, covid 19 death, உறவுகள் அறக்கட்டளை, உறவுகள் அறக்கட்டளை காலித் அகமது, உறவுகள் டிரஸ்ட் காலித் அகமது, உறவுகள் அறக்கட்டளை சென்னை, உறவுகள் டிரஸ்ட் சென்னை, காலித் அகமது உறவுகள் டிரஸ்ட், அடையாளம் தெரியாத உடல்கள், ஆதரவற்ற உடல்கள்
சிசு நல்லடக்கம்

தினமும் சராசரியாக 10 உடல்களை அடக்கம் செய்வோம். அதிகபட்சமாக ஒரே நாளில் 31 உடல்களை அடக்கம் செய்திருக்கிறோம். எப்போதாவது தான் எதுவுமே இல்லாமல் இருக்கும். போலீஸாரை பொறுத்து எண்ணிக்கை மாறுபடும். எங்களைப் பற்றி தெரிந்த காவலர்கள் என்றால் உடனே எங்களுக்கு தகவல் தெரிவித்துவிடுவார்கள். விபத்து நடந்தால் உடலை மார்ச்சுவரிக்கு கொண்டு செல்ல எங்களை அணுகுவார்கள். அதற்கு வாகன ஏற்பாடு நாங்கள் செய்து தருவோம்.

உங்களின் இந்த செயல்பாடுகளுக்கு வீட்டில் ஆதரவு உண்டா?

வீட்டில் எதிர்ப்பு இல்லாமல் எப்படி இருக்கும்? கல்யாண வயதாகிவிட்டது, பெண் பார்த்து நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் இது வேண்டாம் என்று தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் பெரிதளவில் சப்போர்ட் இல்லை.

உங்களால் மறக்க முடியாத அனுபவம்?

எல்லாமே மறக்க முடியாத அனுபவம் தான். 2019-ல் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தம்பதி பிறந்த குழந்தையின் சிகிச்சைக்காக சி.எம்.சி-க்கு வந்திருந்தார்கள். சிகிச்சை முடிந்து வேலூரிலிருந்து ஊருக்கு கிளம்ப சென்னை ரயில் நிலையத்துக்கு வந்தபோது குழந்தை அழ ஆரம்பிக்கிறது. சற்று நேரத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்து விடுகிறது. குழந்தையின் தந்தை மேற்கு வங்க கிரேட் 1 காவலர். சிகிச்சைக்கு வந்ததால் கையில் இருந்த பணமெல்லாம் செலவாகிவிட, செய்வதறியாது இங்குள்ள காவல் நிலையத்திற்கு சென்று தனது நிலைமையை சொல்லியிருக்கிறார்.

Uravugal Trust founder Khaalid Ahamed who is burying unidentified and homeless dead bodies, uravugal trust, uravugal trust chennai, uravugal trust khalid, uravugal trust khalid ahmed, uravugal trust khalid ahmed chennai, unidentified dead body, corona death, covid death, covid 19 death, உறவுகள் அறக்கட்டளை, உறவுகள் அறக்கட்டளை காலித் அகமது, உறவுகள் டிரஸ்ட் காலித் அகமது, உறவுகள் அறக்கட்டளை சென்னை, உறவுகள் டிரஸ்ட் சென்னை, காலித் அகமது உறவுகள் டிரஸ்ட், அடையாளம் தெரியாத உடல்கள், ஆதரவற்ற உடல்கள்
உறவுகள் டிரஸ்ட்

அந்த காவல்நிலையத்திலிருந்து நம்மை அழைத்தார்கள். உடலைப் பெற்றுக் கொண்டு ஓட்டேரி மயானத்திற்கு சென்றோம். குழந்தை பிறந்து சில நாட்களே ஆகியிருந்ததால், அந்த பச்சை உடம்பு தாய் மிகுந்த சோர்வுடன் இருந்தார். குழியில் குழந்தையின் உடலை வைத்து அதற்கு பால் ஊற்ற சொன்னபோது, அந்த தந்தை செய்து விட்டார். குழந்தையின் அம்மா கொஞ்சம் இருங்கள் என பின்னாடி திரும்பிக் கொண்டார். அழுகிறார் என நாங்கள் நினைத்தபோது, தாய்ப்பாலை பீய்ச்சி தன் குழந்தைக்கு இறுதியாக பால் ஊட்டினார் (ஊற்றினார்). அதை பார்த்ததும் மனம் என்னவோ செய்தது. மரணத்தில் தாய்ப்பால் தெளிக்கப்பெற்ற அந்தக் குழந்தைக்கு இது வரமா இல்லை சாபமா எனத் தெரியவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Corona death, Death