ஹோம் /நியூஸ் /சென்னை /

சென்னை வந்தார் அமித் ஷா... ஈபிஎஸ்- ஓபிஎஸ் சந்திக்க திட்டம்

சென்னை வந்தார் அமித் ஷா... ஈபிஎஸ்- ஓபிஎஸ் சந்திக்க திட்டம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தந்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75 ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வருகை தந்துள்ளார். தமிழகம் வருகை தந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, சென்னை விமான நிலையத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜகவின் மூத்த நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

  விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்ற அமித் ஷா அங்கு தங்கியுள்ளார். இன்று காலை 11 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கவுள்ளார்.

  நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

  இதையும் படிங்க: ஆட்சியை தக்கவைக்குமா பாஜக.. மீண்டு(ம்) வருமா காங்கிரஸ் - இமாச்சலத்தில் இன்று வாக்குப்பதிவு

  அதன் பின்னர் தமிழக பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெறும் மையக்குழு கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்கிறார். அத்துடன், முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தை இன்று நண்பகல் அமித் ஷா சந்திக்கவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

  Published by:Kannan V
  First published:

  Tags: Amit Shah, Annamalai, Chennai, O Pannerselvam, OPS, RN Ravi