ஹோம் /நியூஸ் /சென்னை /

“மத்திய அரசு தடுப்பூசி வழங்குவதை நிறுத்திவிட்டது.. இவ்வளவுதான் ஸ்டாக் இருக்கு..” அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்

“மத்திய அரசு தடுப்பூசி வழங்குவதை நிறுத்திவிட்டது.. இவ்வளவுதான் ஸ்டாக் இருக்கு..” அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்

மா.சுப்பிரமணியன்

மா.சுப்பிரமணியன்

சிறுவர்களுக்கு வழங்கப்படும் ‘கோர்பி வேக்ஸ்’ தடுப்பூசி கையிருப்பில் இல்லை - மா.சுப்பிரமணியன்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

மத்திய அரசு வழங்கி வந்த இலவச தடுப்பூசிகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் இலவச பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  நியூஸ்18 தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அதில், “தமிழ்நாட்டில் 3 லட்சம் டோஸ் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. அதில் 2.6 லட்சம் கோவேக்சின் தடுப்பூசி, 40 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி. சிறுவர்களுக்கு வழங்கப்படும் ‘கோர்பி வேக்ஸ்’ தடுப்பூசி கையிருப்பில் இல்லை. மத்திய அரசு கொரோனா தடுப்பூசி வழங்குவதை நிறுத்திவிட்டது. மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பூசியை வழங்க கோரிக்கை விடுத்துள்ளோம்.

தமிழ்நாட்டில் 20% பேர் மட்டுமே பூஸ்டர் டோஸ் செலுத்தியுள்ளனர். மக்களிடம் கொரோனா தடுப்பூசி செலுத்துவதும் ஆர்வம் குறைந்துள்ளது. பூஸ்டர் டோஸ் செலுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.

First published:

Tags: Corona Vaccine, Covid-19 vaccine, Ma subramanian, Nasal Vaccine