ஹோம் /நியூஸ் /சென்னை /

”அப்படியா! நல்லா இருக்கே” இபிஎஸ் பேச்சுக்கு உதயநிதியின் கலகல பதில்

”அப்படியா! நல்லா இருக்கே” இபிஎஸ் பேச்சுக்கு உதயநிதியின் கலகல பதில்

இபிஎஸ் -உதயநிதி

இபிஎஸ் -உதயநிதி

மாற்றுதிறனாளிகள் சில கோரிக்கைகளை வைத்துள்ளனர் அவை முதல்வருக்கு கொண்டு செல்லப்படும் என சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்  உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினத்தையொட்டி கோட்டூர்புரத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்காவில்  நடந்த நிகழ்ச்சியில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர்  உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துகொண்டு மாணவர்களோடு உரையாடினர். மாணவர்களை சந்தித்த அவர்கள் இனிப்புகளும் வழங்கினார்.

பின்னர் மாற்று திறனாளி சிறுவர்களை, இளைஞர்கள் சிலர் பைக்கில் கூட்டிச் சென்று அவர்களை சந்தோஷப்படுத்தினர். அதனை உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின்

இங்குள்ள மாற்றுத்திறனாளிகளிடம் உரையாடிய போது அவர்கள் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். அவை முதல்வருக்கு கொண்டு செல்லப்படும் என்றார்.

இதையும் படிங்க: இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள்.. ராமநாதபுரத்தில் அதிர்ச்சி!

பொது இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்தவையாக இருப்பதற்கான வேலைகள் கண்டிப்பாக எடுக்கப்படும்.

பேருந்துகள் மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்ததாக உருவாக்குவது, மற்ற பல கோரிக்கைகள் குறித்து நானும் சட்டசபையில் பேசியுள்ளேன் என குறிப்பிட்டார்.

அப்போது திராவிட மாடல் என்பதே நாங்கள் உருவாக்கியது என எடப்பாடி கூறியது குறித்து கேட்டதற்கு 'அப்படியா, நல்லா இருக்கே' என  கூறி சென்றார்.

First published:

Tags: Chennai, EPS, Udhayanidhi Stalin