ஹோம் /நியூஸ் /சென்னை /

“கமலாயம் மட்டும் போகாதீங்கனு சொன்னேன்..” ஓபிஎஸ் - இபிஎஸ்-ஐ விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்!

“கமலாயம் மட்டும் போகாதீங்கனு சொன்னேன்..” ஓபிஎஸ் - இபிஎஸ்-ஐ விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்!

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

ஈபிஎஸ் மற்றும் ஒபிஎஸ் போட்டிப் போட்டுக் கொண்டு கமலாலயத்திற்குச் சென்றுள்ளனர் - உதயநிதி ஸ்டாலின்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர் செல்வமும் வெட்கம் இல்லாமல் போட்டிப் போட்டுக் கொண்டு கமலாலயத்திற்குச் சென்றுள்ளார்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

சென்னை ஓட்டேரியில் அறிஞர் அண்ணா மாளிகை திறப்பு விழா மற்றும் 9 ஜோடிகளுக்குக் கட்டணம் இல்லா திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “ஈபிஎஸ் மற்றும் ஒபிஎஸிடம் எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள் கமலாலயம் மட்டும் செல்லாதீர்கள் என கூறினேன்" ஆனால் இருவரும் நேற்று போட்டிப் போட்டுக் கொண்டு கமலாலயத்திற்குச் சென்றுள்ளனர் என விமர்சித்தார். தொடர்ந்து ஈபிஎஸ், ஓபிஎஸ் போல் மணமக்கள் சுயமரியாதையை விட்டுக் கொடுத்து விடாதீர்கள் எனவும் கூறினார்.

First published:

Tags: Annamalai, BJP, OPS - EPS, Udhayanidhi Stalin