ஹோம் /நியூஸ் /சென்னை /

ஜனவரி 9 கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை... அமைச்சர் உதயநிதி இருக்கை மாற்றம்!

ஜனவரி 9 கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை... அமைச்சர் உதயநிதி இருக்கை மாற்றம்!

சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின்

சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின்

ஆளுநர் உரை முழுமையாக நேரலை செய்யப்படும். உறுப்பினர்கள் கட்டாயம் கொரோனா வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் - அப்பாவு

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஜனவரி 9 ஆம் தேதி தொடங்கும் என சபாநாயகர் மு.அப்பாவு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அப்பாவு, “2023 ஆம் ஆண்டுக்கான முதல் பேரவைத் தொடர் ஆளுநர் உரையுடன் வரும் 9 ஆம் தேதி தொடங்கும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஆளுநர் உரை முழுமையாக நேரலை செய்யப்படும். உறுப்பினர்கள் கட்டாயம் கொரோனா வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் ரகுபகுதிக்கு இடையே இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” எனவும் அப்பாவு தெரிவித்தார்.

மேலும், “சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக உதயகுமாரை நியமனம் செய்வது தொடர்பாக தாம் ஏற்கெனவே தெரிவித்த கருத்துக்கு இரு தரப்பினரும் எந்தவித மறுப்பும் தெரிவிக்காததால் அதே நிலை நீடிக்கிறது” எனவும் சபாநாயகர் அப்பாவு கூறினார்.

First published:

Tags: CM MK Stalin, TN Assembly, Udhayanidhi Stalin