முகப்பு /செய்தி /சென்னை / உதயநிதி அவரது துறையை சிறப்பாக நடத்திக் காட்டுவார் - டி.கே.எஸ். இளங்கோவன்

உதயநிதி அவரது துறையை சிறப்பாக நடத்திக் காட்டுவார் - டி.கே.எஸ். இளங்கோவன்

டிகேஎஸ் இளங்கோவன்

டிகேஎஸ் இளங்கோவன்

உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்றார்.   தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் வாழ்த்து தெரிவித்தார்.

பதவியேற்ற உதயநிதிக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பல்வேறு  தரப்பினரும் வாழ்த்து கூறி வருகின்றனர். திமுக செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், கடந்த தேர்தல்களில் உதயநிதி ஆற்றிய பங்கு பெரும் பங்கு என்றும்  திமுகவின் வெற்றியில் அவரது பங்கு மிக குறிப்பிடத்தக்கது எனவும் கூறினார்.

மேலும் இந்த  ஆட்சியிலும் பங்கேற்று, தமிழக அரசு சிறப்பாக செயல்பட பணியாற்றுவார் என்றும் முதலமைச்சருக்கு ஒத்துழைப்பாக இருந்து அவரது துறையை சிறப்பாக நடத்திக் காட்டுவார் என்ற நம்பிக்கையும் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Also see... உங்கள் செயலால் வாரிசு என்ற வசை கழியுங்கள்.. உதயநிதிக்கு வாழ்த்துக் கூறிய வைரமுத்து

உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

First published:

Tags: DMK, Udhayanidhi Stalin