முகப்பு /செய்தி /சென்னை / தமிழக அமைச்சராக இன்று பதவியேற்கிறார் உதயநிதி ஸ்டாலின்...

தமிழக அமைச்சராக இன்று பதவியேற்கிறார் உதயநிதி ஸ்டாலின்...

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

Udayanidhi Stalin | உதயநிதிக்கு தலைமை செயலகத்தில் முழு வீச்சில் புதிய அறை தயாராகி வருகிறது | .

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு அமைச்சராக  உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்கிறார். ஆளுநர் மாளிகையில் கோலாகல விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பால் ஹாலில் காலை 9:30 மணிக்கு அமைச்சராக பொறுப்பேற்கிறார். இந்த விழாவிற்கு 400 பேருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமிக்கும் விழாவிற்கான அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலினுக்காக கோட்டையில் 2-வது மாடியில் பெரிய அறை ஒன்றும் தயாராகி வருகிறது. இந்நிலையில், திமுகவில் உதயநிதியை முன்னணி தலைவராக்கும் முன்னோட்டமாகவே, அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்குவதில் அவசரம் காட்டப்படுவதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அமைச்சர் பொன்முடி, தாமதமாகவே உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், அவர் துணை முதலமைச்சராக பொறுப்பேற்பதை, தான் எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

Also see... உதயநிதி அமைச்சராவதில் இவ்வளவு அவசரம் காட்டுவது ஏன்? - சந்தேகம் கிளப்பும் டிடிவி தினகரன்!

இதனிடையே, அமைச்சர்கள் பலரும், கே.எஸ்.அழகிரி, கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களும், உதயநிதியை அமைச்சராக்குவதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: CM MK Stalin, DMK, Udhayanidhi Stalin