ஹோம் /நியூஸ் /சென்னை /

பெண் பயணியிடம் அத்துமீறிய ஊபர் ஆட்டோ ஓட்டுநர் கைது - வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சி!

பெண் பயணியிடம் அத்துமீறிய ஊபர் ஆட்டோ ஓட்டுநர் கைது - வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சி!

கைது செய்யப்பட்டவர்

கைது செய்யப்பட்டவர்

Chennai | ஊபர் ஆட்டோவில் பயணம் மேற்கொண்ட இளம் பெண்ணிடம் ஆட்டோ ஓட்டுநர் அத்துமீறி நடந்துகொண்டதாக அந்த பெண் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai [Madras] | Chennai | Tamil Nadu

  சென்னையில், சவாரியின் போது ஆட்டோ ஓட்டுனர் அத்துமீறி நடந்துகொண்டதாக இளம்பெண் அளித்த புகாரை தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். 

  சென்னை சோழிங்கநல்லூரில் ஊபர் ஆட்டோவில் பயணம் மேற்கொண்ட இளம் பெண்ணிடம் ஆட்டோ ஓட்டுநர் அத்துமீறி நடந்துகொண்டதாக அந்த பெண் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். மேலும், அவர் சமூக வலைதளம் மூலமாகவும் ஆவணங்களை சமர்பித்து புகார் தெரிவித்திருந்தார்.

  இந்த புகார் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவ, அந்த பெண்ணின் ட்விட்டர் பதிவுக்கு ஊபர் நிறுவனே நடவடிக்கை எடுப்பதாக பதில் அளித்திருந்தது. மேலும், தாம்பரம் காவல் ஆணையரும் ஆட்டோ ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக பதிலளித்திருந்தார்.

  ALSO READ | தொழிலாளி ஒருவருக்கு மட்டும் ரூ.100 கூலி உயர்வு : ஆத்திரத்தில் சக தொழிலாளிகளே கொலை செய்த கொடூரம்!

  இந்த நிலையில், ஆட்டோ ஓட்டுநர் செல்வத்தை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், ஆட்டோவில் சவாரிக்கு ஏற்றும்போதே, தன்னிடம் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் வசதி இல்லை என தெரிவித்த நிலையில், பணம் தருவதாக ஒப்புக்கொண்டு ஏறியவர், இறங்கிய பின்பு பணம் இல்லை என தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். மேலும், பேசிகொண்டிருந்தபோதே தன்னிடம் இருந்து செல்போனை பிடுங்கி கூகுள் பே, போன் பே இருக்கிறதா என பார்த்ததாகவும், அப்போது அவரிடம் இருந்து போனை திரும்பி பிடுங்கியபோது அவர் மீது தெரியாமல் கைப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

  இவரது வாக்குமூலத்தை பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், அந்த விடுதியின் சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில், ஒரு பெண் ஆட்டோவிற்கு வெளியில் நின்று கொண்டிருந்தபோது, மற்றொரு பெண் தன்னிடம் ஆட்டோ ஓட்டுநர் அத்துமீறியதாக கூறி வெளியே ஓடி வந்ததும் பதிவாகியுள்ளது. மேலும், சம்பவம் நடந்த இடத்தில், ஏராளமானோர் சுற்றி வளைத்து தட்டி கேட்டதும் பதிவாகியுள்ளது.

  செய்தியாளர்: வினோத் கண்ணன்

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Arrest, Auto Driver, Chennai, Sexual abuse, Uber