ஹோம் /நியூஸ் /சென்னை /

”குழி தோண்டும்போது கிடைத்த புதையல்... மெகா உருட்டு..! போலி தங்க நகைகளை விற்ற இளைஞர்கள் கைது..!

”குழி தோண்டும்போது கிடைத்த புதையல்... மெகா உருட்டு..! போலி தங்க நகைகளை விற்ற இளைஞர்கள் கைது..!

”குழி தோண்டும்போது கிடைத்த புதையல்... மெகா உருட்டு..! போலி தங்க நகைகளை விற்ற இளைஞர்கள் கைது..!

மெட்ரோ பணிக்கு குழி தோண்டும் போது புதையல் கிடைத்தது, வட இந்தியாவில் சுரங்கம் தோண்டும்போது புதையல் கிடைத்தது என பல பொய்களை கூறி மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Karnataka, India

சென்னையில் ஆற்றில் குழி தோண்டும் போது தங்க புதையல் கிடைத்ததாக கூறி தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை விற்க முயன்ற கர்நாடக இளைஞர்கள் 2 பேர் கைது.

சென்னை, திருவொற்றியூர், காலடிப்பேட்டையை சேர்ந்த பாலமுருகன் அடகு கடை நடத்தி வருகிறார்.பாலமுருகனின் கடைக்கு வந்த 2 இளைஞர்கள் களிமண் எடுக்க ஆற்றில் குழி தோண்டியபோது தங்க புதையல் கிடைத்ததாகவும், நல்ல விலை கொடுத்தால் அதை தருவதாகவும் கூறியுள்ளனர்.அதை நம்பிய பாலமுருகன் புதையலை எடுத்து வரும்படி கூறியுள்ளார். சனிக்கிழமை இருவரும் பாலமுருகனை சந்தித்து ஒரு முத்து மாலையை கொடுத்துள்ளனர்.

அதைப்பார்த்து சந்தேகம் அடைந்த பாலமுருகன் தீவிரமாக சோதனை செய்ய, அது தங்க முலாம் பூசப்பட்ட நகை என்பது தெரிந்தது.உடனே பாலமுருகன் இருவரிடமும் பேச்சுக் கொடுத்தவாரே உட்கார வைத்து விட்டு, வில்லிவாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.போலீசார் இருவரையும் பிடித்து நடத்திய விசாரணையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் வீரூ, அர்ஜுன் என்பது தெரிந்தது.

 இருவரும் கர்நாடகாவில் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட நகைகளை கொண்டு வந்து சென்னையில் பல இடங்களில் விற்பனை செய்ததும் தெரியவந்தது.அம்பத்தூரில் அவர்கள் தங்கியிருந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்தி 2 கிலோ எடையுள்ள தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை கைப்பற்றினர்.போலி நகைகளில் பெரும்பாலும் முத்து மாலைகளே அதிகமாக இருந்தன.

மெட்ரோ பணிக்கு குழி தோண்டும் போது புதையல் கிடைத்தது, வட இந்தியாவில் சுரங்கம் தோண்டும்போது புதையல் கிடைத்தது என பல பொய்களை கூறி மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது.இருவரையும் கைது செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

First published:

Tags: Chennai, Crime News, Gold, Scam