ஹோம் /நியூஸ் /சென்னை /

சென்னையில் இரு தரப்பினர் மோதிக் கொண்டதில் ரவுடி வெட்டிப் படுகொலை

சென்னையில் இரு தரப்பினர் மோதிக் கொண்டதில் ரவுடி வெட்டிப் படுகொலை

கொலை

கொலை

Chennai | சென்னையில் இரு தரப்பினர் மோதி கொண்டதில் ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மற்றொருவர் காய்களுடன் தப்பிச்சென்று மருத்துவமனையில் அனுமதி...

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  சென்னை பள்ளிக்கரணை அம்பேத்கர் குறுக்கு தெருவில் சிலர் ஆயுதங்களுடன் மோதிக் கொள்வதாக பள்ளிக்கரணை காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பள்ளிக்கரணை அதிமுக கவுன்சிலர் வீட்டிற்கு அருகில் உள்ள புதரில், மேடவாக்கம் புஷ்பா நகரை சேர்ந்த ரவுடி பிரைட் ஆல்வின் ரத்த வெள்ளத்தில் இருந்துள்ளார்.உடனே அவரை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் ஏற்றியபோது உயிரிழந்தார். பின்னர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

  மேலும் ரவுடி பலியானதை தொடர்ந்து அவருடன் இருந்த மேடவாக்கம் பகுதியை சேர்ந்த பெருமாள் காயங்களுடன் அங்கிருந்து தப்பி சென்றார். பின்னர் அங்கு இருந்த பொதுமக்கள் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

  Also see... சர்ச்சைக்குரிய சமூக வலைதள தகவல்கள்- துரை வைகோ எச்சரிக்கை

  உயிரிழந்த பிரைட் ஆல்வின் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், அவர்மீது பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது.

  மேலும் உயிரிழந்தவருக்கும் அவரை வெட்டியவர்களுக்கும் என்ன தகராறு? எதற்காக இருதரப்பினர் மாறி மாறி ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டனர்? இருதரப்பினருக்கும் முன் விரோதம் ஏதேனும் இருந்ததா? என்ற பல கோணத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  செய்தியாளர்:  ப.வினோத்கண்ணன்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Chennai, Crime News, Murder case