Home /News /chennai /

மின்சாரம் பாய்ந்து ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் உயிரிழந்த விவகாரத்தில் இரண்டு மின்வாரிய ஊழியர்கள் கைது

மின்சாரம் பாய்ந்து ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் உயிரிழந்த விவகாரத்தில் இரண்டு மின்வாரிய ஊழியர்கள் கைது

ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான ராதாகிருஷ்ணன்

ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான ராதாகிருஷ்ணன்

மின்வாரிய லைன் இன்ஸ்பெக்டரான சாலமன் மற்றும் வயர் மேன் ஏழுமலையை தலைமை செயலக காலனி போலீசார் இன்று காலை கைது செய்தனர்.

பழைய வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(61). இவர் மின்வாரிய துறையில் லைன் இன்ஸ்பெக்டராக (Line Inspector) பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். ஓய்வு பெற்ற பின்பும் தன்னுடன் EB -ல் வேலை பார்த்த நண்பர்களுடன் சேர்ந்து தன்னிச்சையாக மின்சாரம் சம்மந்தப்பட்ட பழுதுகளை பார்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 21ஆம் தேதி தலைமைச் செயலக காலனி நம்மாழ்வார்பேட்டை ஏ.கே.சாமி முதல் தெருவில் மின் இணைப்பு பிரச்சினையின் காரணமாக மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. இதனை சரி செய்வதற்காக மின்வாரிய ஊழியர்கள் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான ராதாகிருஷ்ணனை அழைத்துச் சென்றுள்ளனர்.

தலைமைச் செயலக காலனி பழைய காவல் நிலையம் எதிரில் உள்ள டிரான்ஸ்பார்மர் மீது ஏறி ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான ராதாகிருஷ்ணன் மின் பழுதை சரி செய்து கொண்டிருந்த போது சரியாக மதியம் 1.30 மணியளவில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து மின் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து ராதாகிருஷ்ணனின் மகன் ராஜேஷ் குமார் என்பவர் தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் தலைமை செயலக காலனி போலீசார் அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தல் ( 304(a)) என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான ராதாகிருஷ்ணனை மின் பழுது நீக்கும் பணிக்கு அழைத்துச் சென்றது மின்வாரிய லைன் இன்ஸ்பெக்டரான ( Line Inspector) சாலமன்(54) மற்றும் வயர்மேன்(Wireman) ஏழுமலை(51) என்பது தெரியவந்தது.

Also see... மாணவிகளிடம் ஆபாசமாக வாட்ஸ் அப்பில் பேச்சு... தலைமறைவான பள்ளி ஆசிரியர் போக்ஸோவில் கைது

இதனையடுத்து மின்வாரிய லைன் இன்ஸ்பெக்டரான சாலமன் மற்றும் வயர் மேன் ஏழுமலையை தலைமை செயலக காலனி போலீசார் இன்று காலை கைது செய்தனர். அதனையடுத்து விசாரணைக்கு பின் காவல் நிலைய ஜாமினில் அவர்களை விடுவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Death, EB workers, Electricity

அடுத்த செய்தி