ஹோம் /நியூஸ் /சென்னை /

ஆட்டோ ஓட்டுநர்கள் தான் ஒரே குறி.. புது மொபைலா இருந்தா உடனே சவாரி... சென்னை முழுவதும் கைவரிசை காட்டிய இருவர் கைது

ஆட்டோ ஓட்டுநர்கள் தான் ஒரே குறி.. புது மொபைலா இருந்தா உடனே சவாரி... சென்னை முழுவதும் கைவரிசை காட்டிய இருவர் கைது

செல்போன் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர்

செல்போன் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர்

Chennai | சென்னை முழுவதும் 40 க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களிடம் செல்போன் திருடி கைவரிசை காட்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னையில் ஆட்டோ ஓட்டுநரின் கவனத்தை திசை திரும்பி செல்போனை திருடிய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஆட்டோவில் ஏறி சவாரி செய்த ஒருவர் தன்னுடைய கவனத்தை திருப்பி  செல்போனை கொள்ளையடித்து விட்டதாக புகார் அளித்தார். இந்த புகாரை பெற்ற வடக்கு கடற்கரை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் ஆவடியில் பதுங்கி இருந்த உஸ்மான் அலி மற்றும் சமீர் பாஷா ஆகிய இருவரை கைது செய்தனர்.  அவர்களிடம் நடத்திய விசாரணையில்.,

ஓலா உபர் போன்ற சேவைகளில் ஓடக்கூடிய ஆட்டோக்களை தவிர்த்து, சாதாரணமாக ஓடக்கூடிய ஆட்டோக்களை மட்டுமே குறிவைத்து அந்த ஆட்டோ ஓட்டுநரின் கவனத்தை திசை திருப்பி அவருடைய செல்போனை பறித்து செல்வது இவர்களின் வாடிக்கையாக வைத்திருந்தனர் என்பது தெரியவந்தது.

இதையும் படிங்க: ஜமேஷா முபினின் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டது என்ன? என்.ஐ.ஏ எப்ஐஆர் தகவல்கள்...

மேலும், எந்த ஆட்டோ ஓட்டுநர் புதிய மற்றும் நவீன செல்போன்கள் வைத்திருக்கிறார்கள் என்பதை நோட்டமிட்ட பின்னரே, அந்த ஆட்டோ ஓட்டுனரை நேரடியாக அணுகி, அவரை சவாரிக்கு அழைத்து பல இடங்களுக்கும் அழைத்துச் சென்று இறுதியில் அவரின் கவனத்தை திசை திருப்பி செல்போன்களை கொள்ளையடிப்பது இவர்களுடைய வாடிக்கையாக இருந்து வந்துள்ளது. தங்களுடைய அடையாளத்தை மறைப்பதற்காக எப்போதும் முககவசம் அணிந்து வந்து கொள்ளையில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் கொள்ளையடித்த செல்போன்களை தமிழ்நாட்டை சேர்ந்தவர்களிடம் விற்றால் எளிதாக கண்டுபிடித்து விடுவார்கள் என யோசித்து, வட மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே 2000 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை விற்று வந்துள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட மொபைலை விற்ற பணத்தை மது மற்றும் கஞ்சா போதைக்கு பயன்படுத்தி வந்துள்ளனர்.

புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம், வேப்பேரி, திருவல்லிக்கேணி, ஆவடி, உள்ளிட்ட பல இடங்களில் ஆட்டோ ஓட்டுநர்களிடம் செல்போன்களை கொள்ளையடித்த வழக்கு நிலுவையில் உள்ளது.

40க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களிடம் இவர்கள் செல்போன் பறிப்பில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரிடம் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Published by:Arunkumar A
First published:

Tags: Auto Driver, Chennai, Crime News