Home /News /chennai /

ஆட்டோவில் சென்ற பள்ளி மாணவியிடம் சில்மிஷம் - கானா பாடகர் உட்பட இருவர் போக்சோவில் கைது

ஆட்டோவில் சென்ற பள்ளி மாணவியிடம் சில்மிஷம் - கானா பாடகர் உட்பட இருவர் போக்சோவில் கைது

பள்ளி மாணவியிடம் சில்மிஷம்

பள்ளி மாணவியிடம் சில்மிஷம்

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில், ஆட்டோவில் பயணம் செய்த பள்ளி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட கானா பாடகர் உட்பட இருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    சென்னை, புதுவண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த 14 வயது மாணவி தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 8ம் தேதி  வழக்கம்போல் பள்ளி செல்ல ஷேர் ஆட்டோவில் ஏறியுள்ளார் அந்த ஆட்டோவில் ஏற்கனவே  இரண்டு நபர்கள்  பயணித்து வந்தனர்.

    அப்போது, புதுவண்ணாரப்பேட்டையை ஆட்டோ நெருங்கியபோது மாணவியிடம் அந்த நபர்கள் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். கானா பாடகர்கள் என்பதால் பாட்டு பாடியவாரே செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டு ஆட்டோவில் வந்துள்ளனர். மேலும் மாணவியின் மீது கை பட்டதால் அதிர்ச்சியடைந்த மாணவி தன்னை கடத்தி விடுவார்களோ என்ற பயத்தில் ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே குதித்துள்ளார்.

    இதில் மாணவியின் மூக்கு, தாடை, இரண்டு கைகளிலும் காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து ஆட்டோவில் இருந்த மர்ம நபர்கள் தப்பி ஓடினர். உடனடியாக ஆட்டோ ஓட்டுனர் மாணவியை மீட்டார். இந்த சம்பவம் தொடர்பாக மாணவிக்கு பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆட்டோவில் இருந்து கீழே விழுந்ததில் மாணவிக்கு காயங்கள் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார், சம்பவ இடத்தை ஆய்வு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தினர். அதில், மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

    Must Read : சிங்கப்பூர் கணவருடன் வீடியோ காலில் பேசியபோது சண்டை - இளம்பெண் தற்கொலை

    அதனைத் தொடர்ந்து, வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கானா பாடகரான டோலக் ஜெகன் என்ற  ஜெகதீஸ்வரனையும் கொருக்குப்பேட்டையை சேர்ந்த மணி, ஆகிய இருவரையும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    செய்தியாளர் - அசோக்குமார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Chennai, Crime News, POCSO case, School student

    அடுத்த செய்தி